உடலுறவு கொள்வது போல கனவு வருவது சகஜமான ஒன்றாகும். இது போன்ற கனவுகள் வந்தவுடன் பல சமயங்களில் எழுந்தவுடன் பயம் அல்லது பதட்டம் போன்ற உணவுகளை கொடுக்கும். ஒரு சிலருக்கு இதற்கான அர்த்தம் கடைசி வரை புரியாது. சில மருத்துவ ஆயவுகளின் படி, இந்த கனவுகள் நமது ஆழ் மனதில் உள்ள உணர்வுகளின் வெளிபாடாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உயர் அதிகாரத்தில் இருப்பவரோடு உடலுறவு கொள்வது போல கனவு வருதல்..


உடலுறவு கொள்வது போல கனவு வருவதற்கு எல்லைகளே கிடையாது. நீங்கள் யாருக்கு கீழ் அலுவலகத்தில் வேலை செய்கிறீர்களோ அவருடன் உடலுறவு கொள்வது போல சில சமயங்களில் கனவு வரலாம். இது, உங்கள் ஆழ் மனதின் வெளிபாடாக இருக்கலாம். உங்களுக்கு அப்படி தலைமை இடத்தில் இருக்க்ம் ஒருவருடன் உடலுறவு கொள்வது போல கனவு வந்தால் உங்களுக்கு அவர் மீது அது போன்ற ஆசைகள் இருக்கலாம் என மன நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற கனவுகள் வந்தால் அதை அப்படியே கனவாக எடுத்துக்கொண்டு அதை நனவாக்காமல் இருப்பது மிகவும் நல்லது. 


வெறுப்பு காட்டும் ஒருவருடன் உடலுறவு கொள்வது போன்ற கனவு:


ஒரு சில முறை, நாம் யாரை அடி மனதில் இருந்து வெறுக்கிறோமோ, அவர்களுடன் உடலுறவு கொள்வது போல கனவுகள் வரலாம். நாம் ஒருவர் மீது அன்பு கொள்ளும் போது எந்த அளவிற்கு உணர்வு ரீதியான பிணைப்பு இருக்கிறதோ, அதே போல அவரை பிடிக்காமல் இருக்கும் போதும் அதீத உணர்வுகள் இருக்கும். அந்த உணர்வுகள், சமயங்களில் காம உணர்வாகவும் மாறலாம். இதுவும் உங்கள் ஆழ் மனதின் வெளிபாடுதான். இதற்கு பல அர்த்தங்கள் இருக்கலாம், ஆனால் இதற்கும் உங்களின் இயல்பான வாழ்க்கைக்கும் நேரடியாக தொடர்பு இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.


பிரபலமான ஒருவருடன் உடலுறவு கொள்வது போன்ற கனவு:


சினிமா பிரபலமோ, அல்லது வேறு துறையில் பிரபலமாக இருப்பவருடனோ உடலுறவு கொள்வது போன்ற கனவு வருவதும் இயல்பான ஒன்று. இதற்கு அர்த்தம், அந்த பிரபலத்தை உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாக இருக்கலாம். இது போன்ற கனவுகள் உண்மையாக நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பது உங்களுக்கு தெரியும். அதனால், பிரபலங்களுடன் உடலுறவு கொள்வது போல கனவு வந்தால் அதை வராமல் தடுப்பதற்கு பதில் கனவில் என்ன நடக்கிறதோ அதை அனுபவியுங்கள். 


மேலும் படிக்க | வாழ்வை மகிழ்ச்சியாக மாற்றுவது எப்படி? ‘இதோ’ 7 சிம்பிள் டிப்ஸ்!


முன்னாள் காதலர்-காதலியுடன் உடலுறவு கொள்வது போன்ற கனவு:


சமயங்களில் உங்களின் முன்னால் காதலர் அல்லது காதலியுடன் உடலுறவு கொள்வது போன்ற கனவு வரலாம். இது, நீங்கள் ஏற்கனவே ஒருவருடன் காதல் உறவில் இருந்ததால் அவருடன் இருந்த அந்த நெருக்கமான உணர்வால் இது போன்ற கனவு ஏற்படும். ஒரு காதல் உறவில் இருக்கும் போது முன்னாள் காதலருடன் உடலுறவு கொள்வது போல கனவு வந்தால் அது தவறானது அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு சாதாரண மனிதர் என்பதால், இது போன்ற கனவுகள் வருவது சகஜம் என்பதை நீங்கள் உணர வேண்டும். 


உங்கள் பார்ட்னருடன் உடலுறவு கொள்வது போல வரும் கனவு:


பல சமயங்களில் நாம் யாருடன் காதல் அல்லது திருமண உறவில் இருக்கிறோமோ அவருடன் உடலுறவு கொள்வது போல கனவுகள் வரலாம். இது மிகவும் பொதுவான விஷயமாகும். அதனால் இது உங்களுக்கு அவர்கள் மீது உங்கள் ஆழ்மனதில் உள்ள் காதல் மற்றும் ஈர்ப்பின் வெளிபாடாகும். ஆகையில், இது போன்ற கனவுகள் வந்தால் அதை முடிந்தவரை உங்கள் பார்டனுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால், உங்களுக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கலாம். 


மேலும் படிக்க | கிரீன் டீ குடித்தால் உடல் எடை குறையுமா? குறையாதா? இதோ பதில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ