கிரீன் டீ குடித்தால் உடல் எடை குறையுமா? குறையாதா? இதோ பதில்!

நம்மில் பலர், உடல் எடை குறைப்பதற்கு கிரீன் டீயை குடிப்போம். இது, உண்மையாகவே எடை குறைக்க உதவுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jan 27, 2024, 07:14 PM IST
  • கிரீன் டீ குடித்தால் உடல் எடை குறையுமா?
  • மருத்துவர்கள் கூறும் உண்மைகள்.
  • இதில் ஆண்டி ஆக்சிஜன் பண்புகள் அதிகமாக உள்ளன.
கிரீன் டீ குடித்தால் உடல் எடை குறையுமா? குறையாதா? இதோ பதில்! title=

எடையை குறைக்க நினைப்பவர்கள், கொழுப்பை கரைக்க நினைப்பவர்கள் கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பர். ‘கேமல்லியா சினென்சிஸ்’ எனப்படும் தேயிலை செடியில் இருந்து இந்த கிரீன் டீ தயாரிக்கப்படுகிறது. 

மற்ற தேனீரில் இருப்பது போல இல்லாமல், கிரீன் டீயில் குறைவான அளவிலேயே கஃபைன் சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் சத்துக்கள் அதிகம் அடங்கியுள்ளன. உடல் எடையை குறைக்க விரும்புவோர், கொழுப்பை கரைக்க விரும்புவோர், இதை தினசரி குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அப்படி கிரீன் டீயில் என்ன உள்ளது? கிரீன் டீயை ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்க வேண்டும்? எத்தனை கிரீன் டீ குடித்தால் உடலில் உள்ள கொழுப்பு குறையும்? இங்கு பார்ப்போம். 

கிரீன் டீ குறித்த தவறான புரிதல்கள்:

கிரீன் டீயில் உள்ள நன்மைகள், உடலில் பல நன்மைகள் ஏற்பட்டாலும் இது குறித்த தவறான புரிதல்களை பலர் கொண்டிருக்கின்றனர். அவை என்னென்ன?

அதிகமாக குடிக்கலாமா?

எடை இழப்புக்காக பலர் நாள் முழுவதும் பல கப் கிரீன் டீயை பருகுகிறார்கள். கிரீன் டீயை அதிகமாக உட்கொள்வது வயிற்றில் அமில அளவைத் அதிகரிக்க செய்து அமிலத்தன்மையை ஏற்படுத்தும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இது குறித்து நடத்தப்பட்ட ஆராய்சிகள், 4 கப்புகளுக்கு மேல் குடிக்க கூடாது என கூறப்படுகிறது. 

இதில் காஃபின் இல்லையா?

வழக்கமான தேநீர் மற்றும் காபியை விட கிரீன் டீயில் காஃபின் குறைவாக உள்ளது என்று பொதுவாக நம்பப்படுகிறது. நிபுணர்கள் பலர் இது, உண்மையல்ல என்று கூறுகின்றனர். பல மருத்துவ ஆராய்ச்சிகள் கிரீன் டீயில் காஃபின் உள்ளது என்று குறிப்பிடுகிறார், இது அதிக அளவுகளில் அமிலத்தன்மையை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.

மேலும் படிக்க | இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் இருக்க..‘இந்த’ 5 காய்கறிகளை சாப்பிடுங்கள்!

இது எடை இழப்புக்கு உதவுமா?

பலர், உடல் எடையை  குறைக்க கிரீன் டீயை பிறருக்கும் பரிந்துரைப்பர், தாங்களும் எடுத்துக்கொள்வர். சிலர், கிரீன் டீ குடித்தால் உடனடியாக எடையை குறைக்கலாம் என்றும் கூறுவர். ஆனால், இது உண்மையல்ல என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது, கொழுப்பை எரிக்கவோ குறைக்கவோ உபயோகப்படாது எனவும், இதை குடிப்பதல் மட்டும் உடல் எடை குறையாது எனவும் மருத்துவ்ரகள் தெரிவிக்கின்றனர். பிற தேனீர் பானங்களுடன் ஒப்பிடும் போது இது ஹெல்தியான பானமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள், சர்க்கரை பானங்களுக்கு பதிலாக இதை குடிப்பதால் உடல் நலனை மேம்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

கிரீன் டீயில் ஆண்டி ஆக்ஸிடன்ட்ன்ஸை அதிகரிக்க சில உணவு பொருள்களை இதில் சேர்க்க வேண்டும். அவை, இலவங்கப்பட்டை, துளசி, இஞ்சி, மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு ஆகும். இருப்பினும், கிரீன் டீயில் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவும்.

மேலும் படிக்க | வாழ்வை மகிழ்ச்சியாக மாற்றுவது எப்படி? ‘இதோ’ 7 சிம்பிள் டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News