அரியவகைப் பொருட்கள் ஏலம் விடப்படும்போது அவை நல்ல விலைக்கு விற்பதை பார்க்க முடிகிறது. பழைய நாணயங்கள், பணத்தாள்கள் என ஒரு ரூபாய் மதிப்பானதாக இருந்தாலும் லட்சக்கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் கூட ஏலத்தில் எடுக்கப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதற்கு அண்மை உதாரணமாக ஒரு அரிய நாணயம் 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. பிரிட்டனில் 1643ம் ஆண்டில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது வெளியிட்ப்பட்ட ட்ரிபிள் யூனைட் நாணயம் (Triple Unite coin) அச்சிடப்பட்டது.


பிரிட்டன் சக்கரவர்த்தி முதலாம் சார்லஸின் ஆட்சியில் அச்சிடப்பட்ட அந்த நாணயம் GBP 44,000 (சுமார் ரூ. 50 லட்சம்) க்கு ஏலம் விடப்பட்டது. 1643 இல் ஆக்ஸ்போர்டில் அச்சிடப்பட்ட இந்த அரிய நாணயத்தின் அசல் மதிப்பு 60 வெள்ளி அல்லது 3 பவுண்டகள் மட்டும் தான் என்பது ஆச்சரியமான உண்மை.


Also Read | உயிரை காவு வாங்கும் போன் நம்பர்! நீடிக்கும் மர்மம்!


நாணயத்தில், பிரிட்டன் அரசர், வாள் மற்றும் ஆலிவ் கிளையை வைத்திருப்பது போல அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் முன்னதாக ஏல நிறுவனமான டிக்ஸ் நூனன் வெப் (Dix Noonan Webb) தளத்தில் விற்கப்பட்டது.


ஏல விற்பனையாளர் கிறிஸ்டோபர் வெப் கருத்துப்படி, 26.57 கிராம் டிரிபிள் யுனைட் நாணயம், "அதன் முந்தைய மதிப்பை விட மிக அதிகமாக பெற்றுள்ளது".


"போரின் செலவைச் சந்திப்பதற்கான ஒரு வழிமுறையாக அரசர் ட்ரிபிள் யூனிட் நாணயத்தை பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்" என்று அவர் கூறுகிறார்.


Read Also | சீனா, ரஷ்யா& பாகிஸ்தான் தூதர்கள் தாலிபானை சந்தித்தது ஏன்


அவர் மேலும் கூறினார்: "அரசரின் தோற்றம் கத்தோலிக்கராக இருந்தபோதிலும், புராட்டஸ்டன்ட் மதம், ஆங்கில சட்டம் மற்றும் நாடாளுமன்றத்தின் சுதந்திரத்தை பாதுகாப்பதாக அறிவிக்கிறது.


மேலும், லண்டனின் பரந்த வளங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அவருக்கு இன்னும் அதிகாரம் மற்றும் நிதி இருந்தது என்பதை நிரூபித்தது. ஆக்ஸ்போர்டில் உள்ள அவரது புதிய போர் தலைமையகத்தில் நாட்டின் மிகச்சிறந்த வேலைப்பாடுகளில் ஒருவரால் உருவாக்கப்பட்ட நாணயம் இது”.  


டிரிபிள் யூனைட் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த நாணயம் விற்கப்பட்டது, இந்தத் தொகுப்பில், மன்னர் முதலாம் சார்லஸ் மற்றும் ஆலிவர் க்ராம்வெல்லின் காலங்களிலிருந்த நாணயங்களையும் கொண்டுள்ளது. 1656 இல் 0 ஷில்லிங் மதிப்புள்ள ஒரு க்ராம்வெல் நாணயம் GBP 24,000 க்கு ஏலம் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Also Read | பிரபல மகாபாரத பாடல், சுலோகங்களை பிசிறில்லாமல் பாடும் இஸ்லாமியர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR