திமிங்கலத்தின் வாந்திக்கு இவ்வளவு மவுசா.! கோடிகளை கொடுத்து வாங்க கியூ
திமிங்கலத்தின் வாந்தியை கோடிக்கணக்கில் விலை கொடுத்து வாங்கும் சர்வதேச சந்தைகள். ஏன் அதற்கு இவ்வளவு மதிப்பு தெரியுமா?
திமிங்கில வாந்தி அல்லது அம்பர்கிரிஸ் (Ambergris) என அழைக்கப்படும் ஒரு வகை திடப்பொருள் திமிங்கிலத்தின் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேறுகிறது. இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். திமிங்கிலமானது பீலிக் கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்பது வழக்கம். அந்த பீலிக் கணவாயின் ஓட்டை திமிங்கலங்களின் செரிமான அமைப்பால் செரிக்க வைக்க முடியாது. அதனால் இந்த ஓடுகள் திமிங்கிலத்தின் குடலில் சிக்கிக்கொள்ளும். இந்த ஓட்டினால் திமிங்கிலத்தின் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஒட்டை சுற்றிய செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவம் உற்பத்தியாகிறது. இதனை அம்பர்கிரிஸ் என்பர். இது நறுமணப் பொருட்கள் மற்றும் பாலியியல் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | திருமண வீட்டில் மது விருந்து ; குடித்துவிட்டு தண்டவாளத்தில் உறங்கிய நண்பர்கள் பலி
இந்த அம்பர்கிரிஸ் மீது சூரிய ஒளி படுவதினாலும், மற்றும் கடலின் உப்பு நீரில் ஊறி கொண்டிருப்பதலும் அவை நிறத்திலும், தன்மையிலும் மாற்றம் பெற்று கடலில் மிதக்கிறது. அதன் பிறகு பல மாதங்கள் அல்லது வருடங்கள் களித்து கரை ஒதுங்கும் அம்பர்கிரிஸ், ஈரத்தன்மையுடன் இருக்கும். அப்போது கடுமையான துர்நாற்றம் வீசும் எனக்கூறும் ஆய்வாளர்கள், அது வெயில் பட்டு மெல்ல மெல்ல உலர்ந்து வரும்போது நறுமணமாக மாற்றம் பெரும் எனவும் தெரிவிக்கின்றனர். இந்த திமிங்கலத்தின் அம்பர்கிரிஸ், உலக அளவில் உயர்ரக வாசனைத் திரவியங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருள்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த வாசனை திரவியம் விரைவில் காற்றில் கலந்து வீணாகாமல் இருக்கும் திட தண்மையை கொடுக்கும் பண்பு இந்த அம்பர்கிரிஸ்க்கு உள்ளதாம்.
மேலும், திமிங்கலத்தின் அம்பர்கிரிஸ் பாலியல் உணர்வை தூண்டும் தன்மையுடன் இருப்பதால் மேலை நாடுகளில் இதை வைத்து மருந்துகள் தயாரித்து மார்கெட்டில் கோடிக்கணக்கில் விற்பதாகவும் கூறப்படுகிறது. இத்தனை சிறப்பு பண்புகள் மிக்க திமிங்கலத்தின் அம்பர்கிரிஸ் விலை என்ன தெரியுமா.. ஒன்றரை கோடியில் இருந்து 3 கோடி ரூபாய் வரை இருக்கிறது. கடல் தங்கம், மிதக்கும் தங்கம் என்றெல்லாம் அழைக்கப்படும் திமிங்கலத்தின் வாந்திக்கு இவ்வளவு மதிப்பு என்பது வியப்பாகத்தான் உள்ளது.
மேலும் படிக்க | ரயிலில் ‘வித் அவுட்’டில் பயணித்த இளைஞரின் பையில் ரூ.2 கோடி - எங்கு பிடிபட்டது?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR