உலகில் உள்ள பல மில்லியன் மக்களால் பொதுவாக அதிகம் விரும்பப்படும் ஒரு விலங்கு, நாய். இது, மனிதர்களின் சிறந்த நண்பர்களாக விளங்குகிறது. தன்னை வளர்த்தவர்களுக்கு உண்மையாகவும் பாசமாகவும் இருக்கிறது. இதனாலேயே, பலர் நாய் வளர்த்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு சரியாக ஊசி போட்டு, சாப்பிடுவதற்கு சரியான உணவுகளை கொடுத்தால் அந்த நாய்கள் நல்ல முறையில் வளரும். இதற்கு அப்படியே நேர்மாறாக இருக்கின்றன தெரு நாய்கள். அவற்றை சரியாக பார்த்துக்கொள்வதற்கோ பராமரிப்பதற்கோ ஆட்கள் இல்லை. 


இதில், பல நாய்களுக்கு போட வேண்டிய நேரத்தில் ஊசியும் போடுவதில்லை. இதனால் அவற்றிற்கு பல சமயங்களில் வெறிபிடித்து விடுகிறது. இதனால் அவை குழந்தைகள் உள்பட பல்வேறு நபர்களை கடித்து விடுகிறது. அது மட்டுமன்றி, அந்த வாயில்லா நாய் சும்மா இருந்தாலும் ஒரு சிலர் அதன் மீது கல்லெறிந்து, அல்லது வேறு ஏதேனும் செய்து வெறுப்பேற்றுவதால் அவை கடிக்க வருகின்றன. இந்த நிலையில், நாய் நம்மை துரத்தி வரும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு பார்ப்போம். 


கடைப்பிடிக்க வேண்டியவை:


>பொதுவாக நாய் நம்மை துரத்தும் போது நமக்கு பயம் ஏற்படதான் செய்யும். ஆனால், இந்த நிலையில் நாம் நம்மை சாந்தப்படுத்திதான் ஆக வேண்டும். ஏனென்றால் நாய்களுக்கு நமது பயத்தை மட்டுமல்ல, நாம் என்ன உணர்கிறோம் என்பதை அறியும் திறன் இருக்கிறது. இந்த பயம், அது நம் மீது பாய்வதற்கு இன்னும் பெரிய காரணத்தை வழங்கலாம். எனவே, வேகமாக எதையும் செய்வதற்கு முனைய வேண்டாம். 


>கண்களை பார்க்க வேண்டாம் : எந்த மிருகம் நம்மை துரத்தினாலும் அதனுடன் நேரடியாக நாம் கண்ணோடு கண் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், கண்ணோடு கண் பார்ப்பதால் அவை நீங்கள் அதற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக உணர்கின்றன. எனவே, உங்களை தாக்க வரும் நாயை நேரே பார்ப்பதை தவிர்க்கவும். 


மேலும் படிக்க | கண்களை பாதிக்கும் புற ஊதாக்கதிர்களில் இருந்து தப்பிக்க 8 வழிகள்..!


>ஒரு நாய் உங்களை நோக்கி வந்தால் இருக்கும் இடத்தில் அப்படியே நிற்க வேண்டும். அந்த நாய், உங்களை கடிக்க தான் வருகிறதா என்று தெரியாமல் கூச்சலிடுவதை அல்லது சத்தம் போடுவதை தவிர்க்கவும். அதே போல, நீங்கள் பின்புறம் திரும்புவதால், அவை உங்களை தாக்கும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. 


>ஒரு நாய் உங்களை தாக்க வரும் போது, மெதுவாக திரும்பி பார்க்காமல் பின்னோக்கி செல்லவும். அப்படியே அருகில் இருக்கும் ஏதேனும் கட்டடம் அல்லது காரின் அருகே அதன் கண்ணில் படாமல் நிற்கவும். 


>நாய் உங்களை கடிக்க வரும் போது, உங்கள் கையில் இருக்கும் பேக், ஜாக்கெட் அல்லது ஏதேனும் ஒரு பொருளை வைத்து உங்களை தற்காத்துக்கொள்ளவும். இதனால், அந்த நாய் உங்கள் அருகில் வராமல் நீங்கள் தடுக்க வேண்டும். 


>அந்த நாயால் உங்களுக்கு லேசான கீரல் அல்லது சிறிய அளவில் பல் பதிந்திருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். அப்பாேதுதான் அதிலிருந்து கிருமிகள் எதுவும் பரவாமல் இருக்கும். சோப், தண்ணீர் மற்றும் காயத்தை சுத்தப்படுத்தும் மருந்தை கொண்டு இதனை நீங்கள் சுத்தப்படுத்த வேண்டும். 


மேலும் படிக்க | வியர்வை நாற்றத்தில் இருந்து தப்பிக்க ஈசியான வழிகள்! ‘இதை’ செய்யுங்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ