தினமும் முடிக்கு ஷாம்பூ பயன்படுத்தலாமா? அப்படி பயன்படுத்தினால் என்ன ஆகும்?
Hair Care Routine: கோடை காலத்தில் வெப்பத்தினால் மதலையில் வியர்வை அதிக அளவு படியும். இதனால் பெரும்பாலானோர் தினமும் ஷாம்பு பயன்படுத்துகின்றனர்.
Hair Care Routine: இந்தியா முழுவதும் இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருந்தது. தென்னிந்தியா முதல் வட இந்தியாவை அவை வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்தது. பலரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தலையில் வியர்வை காரணமாக சிலர் முடிக்கு தினமும் ஷாம்பு பயன்படுத்துகின்றனர். முடிக்கு ஷாம்பு பயன்படுத்த வேண்டும் என்றாலும் தினசரி பயன்படுத்துவது நல்லதா கெட்டதா என்று தெரியாமல் பலர் பயன்படுத்துகின்றனர். இதனால் இந்தப் பிரச்சனை இன்னும் பெரிதாகிறது. ஆண்களை விட பெண்கள் முடிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
மேலும் படிக்க | ஓமத்தை ‘இப்படி’ சாப்பிட்டா... யூரிக் அமில பிரச்சனைக்கு முடிவு கட்டலாம்..!!
முடியை மெருதுவாக பராமரிக்க பல தயாரிப்புகளை பயன்படுகின்றனர். பெண்களுக்கும் தினசரி முடிக்கு ஷாம்பு பயன்படுத்தினால் தலைமுடி கெட்டுவிடும் அல்லது கொட்டும் என்ற அபாயம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், கோடையில் தினமும் ஷாம்பு பயன்படுத்தலாமா கூடாதா என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். வெயில் காலத்தில் சரும பிரச்சனைகளுடன் முடி கொட்டும் பிரச்சனையும் பலருக்கு உள்ளது. கடுமையான வெயில் காரணமாக தலையில் வியர்வை அதிகமாக ஏற்படுகிறது. அதிக வியர்வை காரணமாக முடி மந்தமாகவும் விரைவாக வறண்டும் போகிறது. இதனால் பொடுகு மற்றும் அரிப்பு பிரச்சனை ஏற்படுகிறது.
இந்த பிரச்சனையை சரி செய்ய பலரும் குளிக்கும் போது ஷாம்பு பயன்படுத்துகின்றனர். ஆனால் தினசரி தலைக்கு ஷாம்பு பயன்படுத்தினால் முடி கொட்டும் என்ற அச்சமும் பலரது மனதில் இருக்கிறது. பொதுவாக தலைக்கு ஷாம்பு பயன்படுத்திய பிறகு புதிய புத்துணர்ச்சி கிடைக்கும். ஆனால் இரவு தூங்கும் முன் நாள் முழுவதும் வெயிலின் காரணமாக மீண்டும் அழுக்காகிவிடும். முடிக்கு தினசரி ஷாம்பு பயன்படுத்துவது நல்லது இல்லை என்றாலும் உங்களின் முடியின் வகை, காலசூழ்நிலை பொறுத்து மாறுபடும். தினசரி தலைக்கு ஷாம்பு பயன்படுத்தினால் தலையில் உள்ள இயற்கையான எண்ணெய்கள் குறையத் தொடங்குகிறது.
மேலும் ஷாம்பு பயன்படுத்துவதால் முடி உதிர்வு பிரச்சனையும் சிலருக்கு ஏற்படலாம். அதே நேரத்தில், இது உங்கள் முடியின் அமைப்பையும் பாதிக்கிறது. எப்போதும் உங்கள் தலைமுடிக்கு ஏற்ற ஷாம்பூவை தேர்வு செய்ய வேண்டும். ஷாம்புவில் என்ன என்ன ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். முடியை மென்மையாகவும், ஊட்டமளிப்பதாகவும் மாற்ற வேண்டும். ஷாம்பூவால் உங்கள் தலைமுடி சேதமடைய கூடும் என்பதால் அதற்கேற்ற லேசான க்ளென்சரைப் பயன்படுத்தவும். உங்கள் தலைமுடி மிகவும் வறண்டிருந்தால் மட்டுமே மாய்ஸ்சரைசிங் ஷாம்பு பயன்படுத்தவும். கோடை காலத்தில் மாய்ஸ்சரைசிங் ஷாம்பூவை பயன்படுத்துவது நல்லது இல்லை.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE Media இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | முகக் கொழுப்பை குறைக்க... என்ன சாப்பிடலாம்...? என்ன சாப்பிடக்கூடாது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ