புதுடெல்லி: மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சத்தை கொண்டு வர வாட்ஸ்அப் (WhatsApp) கடந்த பல மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பயனர்கள் ஒரே வாட்ஸ்அப் கணக்கை ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் பயன்படுத்த முடியும். சமீபத்திய தகவலின் மூலம், வாட்ஸ்அப்பின் மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சத்தின் பரிசோதனை தொடங்கியது என்று அறியப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாட்ஸ்அப்பின் (WhatsApp) மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சத்துடன் தொடர்புடைய இந்த தகவல் தொழில்நுட்ப ப்ளாக் ஆன WABetaInfo  ட்வீட் மூலம் இந்த தகவலை வழங்கியுள்ளது. கடந்த வாரம், வாட்ஸ்அப் பல சாதன  உபயோக்கிக்க வகை செய்யும் மல்டி டிசைஸ் சப்போர்ட் அம்சத்தை பரிசோதிக்கத் தொடங்கியது  என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  ஒரே வாட்ஸ்அப் கணக்கை, வெவ்வேறு சாதனங்களில் கன்பிகர் செய்து  மூலம் கால் செய்வது குறித்து பரிசோதனை செய்யப்படுகிறது.


இருப்பினும், வாட்ஸ்அப்பின் மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சத்தைப் பற்றி எந்த தரவும் இதுவரை கிடைக்கவில்லை. வாட்ஸ்அப்பின் பல சாதன சபோர்ட் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டால், பயனர்கள் ஒரே வாட்ஸ்அப் கணக்கை 4 வெவ்வேறு சாதனங்களில் ஒரே நேரத்தில் இயக்க முடியும்.



குறிப்பிடத்தக்க வகையில், வாட்ஸ்அப் வெப்பை (WhatsApp Web) பயன்படுத்த, முதன்மை சாதனத்தில் இருந்து ஆக்டிவ் இணைய இணைப்பு தேவைப்படுகிறது. ஆனால், புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டால், இது தேவையில்லை.


முன்னதாக, மல்டி-டிவைஸ் சப்போர்ட் (Multi Device Support)  அம்சத்தில்,  இணைக்கப்பட்ட சாதனங்கள் (Linked Devices) பிரிவின் கீழ் வாட்ஸ்அப்பில் இந்த வசதி கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. புதிய சாதனத்தைச் சேர்க்க, பயனர் ஒரு புதிய சாதன இணைக்க Link a New Device Option என்பதை தேர்வு செய்ய வேண்டும்.


ALSO READ | Snow Festival in China: மனதை கொள்ளை கொள்ளும் பனி சிற்பங்களை காணலாம்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR