Snow Festival in China: மனதை கொள்ளை கொள்ளும் பனி சிற்பங்களை காணலாம்..!!!

Harbin International Ice and Snow Festival: சீனாவின் ஹார்பின் பனி மற்றும் பனி உலகில் (Harbin Ice and Snow World),  காணப்படும் பனியினால் கட்டப்பட்ட பெரிய அரண்மனைகள் மற்றும் அழகான சிற்பங்களை காணலாம்...

பெய்ஜிங்: ஹார்பின் சர்வதேச பனி விழா சீனாவில் ஜனவரி 5 முதல் பிப்ரவரி இறுதி வரை நடைபெறுகிறது. ஸ்னோ கார்னிவல் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் உள்ளது. ஹார்பின் சர்வதேச பனி விழாவை காண ஏராளமான மக்கள் சீனா வருகிறார்கள். அங்கே பனியினால் கட்டப்பட்டுள்ள அரண்மனைகள், சிற்பங்கள் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நகரத்தின் அழகு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இந்த அழகான புகைப்படங்களைப் பார்ப்போம் ...

1 /10

ஹார்பின் சர்வதேச பனி மற்றும்  விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 5 முதல் பிப்ரவரி 5 வரை சீனாவில்  நடக்கிறது. இதில், கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட அற்புதமான பனி சிற்பங்கள் கண்காட்சியாக வைக்கப்படும் திருவிழாவாகும். (Image credit: Twitter / @ saatchi_gallery)

2 /10

ஹார்பின் ஐஸ் மற்றும் ஸ்னோ வேர்ல்ட் கலைஞர்கள் சோங்குவா ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட பனியிலிருந்து பல நேர்த்தியான வடிவமைப்புகளை உருவாக்கியுள்ளனர். இது சுற்றுலாப் பயணிகளை பெருமளவு கவர்கிறது. (Image credit: Twitter/@Crazyinnasia)

3 /10

வடக்கு சீனாவில் ஹீலோங்ஜியாங் மாகாணத்தின் ஹார்பின் ஐஸ் மற்றும் ஸ்னோ வேர்ல்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இங்குள்ள அழகிய சிற்பங்கள் மற்றும் வடிமமைப்புகள் கண்ணிற்கு விருந்தாக உள்ளன. (Image credit: Twitter / @ TanSuoTravel)

4 /10

சீனாவில் ஹார்பின் சர்வதேச பனி விழாவில், ஒரு சுற்றுலாப் பயணி பனியால் அமைக்கப்பட்ட பியானோவை வாசிக்கிறார் பாருங்கள். (Image credit:Twitter/@KawaiPianos)

5 /10

சீனாவின் ஹார்பின் ஐஸ் மற்றும் ஸ்னோ வேர்ல்டில் பனி சிறபங்கள் மற்றும் கட்டமைப்புகள் அமைக்க 110,000 கன மீட்டர் பனி பயன்படுத்தப்பட்டுள்ளது. (Image credit: Twitter/@sobore)

6 /10

சீனாவின் ஹார்பின் பனி மற்றும் பனி உலகில், மிகப்பெரிய பனி அரண்மனைகள் மற்றும் அழகான சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 3D லைட் ஷோவும் உள்ளது. இது அதன் அழகை இன்னும் அதிகரிக்கிறது. (Image credit: Twitter/@sobore)

7 /10

ஹார்பின் ஐஸ் மற்றும் ஸ்னோ வேர்ல்டில், 12 நாடுகளைச் சேர்ந்த பனி சிற்பிகள், சிற்பங்கள் மற்றும் பெரிய அரண்மனைகளை உருவாக்கும் பணியில் பங்கேற்கின்றனர். (Image credit: Twitter/@Piclogy)  

8 /10

ஹார்பின் ஐஸ் மற்றும் ஸ்னோ வேர்ல்ட் 600,000 சதுர மீட்டரில் பரவியுள்ளது மற்றும் பார்வையிட 100 க்கும் மேற்பட்ட கவர்ச்சிகரமான இடங்களை கொண்டுள்ளது, (Image credit: Twitter/@karurvnmohan)

9 /10

பெரிய பனி சிற்பங்கள் மற்றும் அரண்மனைகளைக் காண நீங்கள் சீன ஹார்பின் ஐஸ் மற்றும் ஸ்னோ வேர்ல்டில் நுழைய விரும்பினால், நீங்கள் $48, அதாவது  ₹3543 செலுத்த வேண்டும். (Image credit: Twitter/@FunnyChengdu)

10 /10

சீனாவில் நடைபெற்ற ஹார்பின் சர்வதேச பனி மற்றும் பனி சிற்ப விழாவில் மஸ்கட் யோட்லியின் (Mascot Yodli)  சிலை ஒரு பனி அரண்மனைக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளது. (Image credit: Twitter/@youtholympics)