மனிதராக பிறந்த அனைவருக்குமே, காதல் என்பது வந்திருக்கும். அந்த காதல், பல சமயங்களில் கை சேர்ந்திருக்கலாம். சில சமயங்களில் கை சேராமல் இருந்திருக்கலாம். கை சேராமல், ஒரு தலையாக முடிவு பெற்ற காதலும் இருக்கலாம். அந்த காதல் கை சேராமல் இருப்பதற்கு, சம்பந்தப்பட்ட இரு நபர்களில், ஒருவர் மனதை திறந்து பேசாமல் இருந்திருப்பார். அப்படி, நீங்களும் உங்களுக்கு கிடைத்த சான்ஸை மிஸ் செய்து விடாமல், உங்கள் க்ரஷ்ஷிற்கு எந்த நேரத்தில் ப்ரப்போஸ் செய்யலாம் என்பதை குறித்து இங்கு பார்ப்பாேம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒத்துப்போகும் பிடித்த விஷயங்கள்:


இருவருக்கும் முதலில் எந்தெந்த விஷயங்களில் ஒத்துப்போகிறது என்பதையும், அந்த விஷயத்தால் இருவருக்கும் நல்ல உணர்வு ஏற்படுகிறதா என்பதையும் பார்க்க வேண்டும். அது ஒரு இடமாக இருந்தால் அங்கு அவரை அழைத்து சென்று ரிலாக்ஸ் ஆன சூழலை அமைத்துக்கொண்டு அவரை அப்ரோச் செய்ய வேண்டும். 


உணர்வு ரீதியான தொடர்பு:


உங்கள் இருவருக்கும் உணர்வு ரீதியான இணக்கம் மற்றும் புரிதல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், உங்களுக்குள் பிடித்தம் இருந்தாலும், காதல் இருந்தாலும் இன்னும் பெரிதாக சேரும். நீங்கள் அவருக்கு ப்ரப்போஸ் செய்யும் நேரத்தில், இருவரும் ஆழமாக உங்கள் உணர்வுகளை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது உங்கள் காதலை வெளிப்படுத்தலாம். 


சரியான தேதி:


உங்கள் க்ரஷ்ஷிற்கு ப்ரப்போஸ் செய்ய, குறிப்பிட்ட நாளை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த தேதி, உங்கள் இருவருக்கும் ஸ்பெஷலான தேதியாக இருக்கலாம். நீங்கள் இருவரும் முதலில் பார்த்துக்கொண்ட தினம், அல்லது இருவரும் முதலில் பேசிக்கொண்ட தினம் என உங்கள் மனதில் அவர் குறித்து ஸ்பெஷலாக இருக்கும் தினத்தில் அவருக்கு ப்ரப்போஸ் செய்யலாம். 


தனிப்பட்ட முறையில்..


உங்கள் க்ரஷ்ஷிற்கு அல்லது காதலிக்கு ப்ரப்போஸ் செய்வதற்கு முன்பு அது தனிப்பட்ட முறையில் ப்ரைவேட்டாக இருக்க வேண்டுமா அல்லது பொது வெளியில் பிரம்மாண்டமாக ப்ரப்போஸ் செய்ய போகிறீர்களா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு சிலர் அதிகம் பேர் தன்னை பார்த்தாலோ, கவனம் கொடுத்தாலோ அதை விரும்ப மாட்டார்கள். அப்படி இருக்கையில், நீங்கள் இருவர் மட்டும் தனியாக இருக்கும் சமயத்தில் ப்ரப்போஸ் செய்யலாம். குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருந்தால் அவர்களுக்கு மத்தியில் ப்ரப்போஸ் செய்யலாம். 


மேலும் படிக்க | இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் என்னென்ன பிரச்சனை வரும் தெரியுமா?


மனநிலை:


உங்கள் க்ரஷ்ஷிடம் பேசும் போது, அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதும் மிகவும் அவசியம் ஆகும். அவர் கொஞ்சம் சோகமான அல்லது கோபமான மனநிலையில் இருந்தால் அவரிடத்தில காதல் குறித்து பேசுவதை தவிர்க்கவும். 


உள்மனது சொல்லும் விஷயம்:


உங்களுக்கு ஒருவரை பிடித்திருக்கிறது என்றால், உங்கள் ஆழ்மனமே மிகவும் ஊர்ஜிதமாக “இவரிடம் இந்த விஷயத்தை இப்போதே சொல்லி விட வேண்டும்” என்று உங்களுக்கு உணர்த்தும். ஆனால், அவரை பார்க்கும் நேரத்தில் எல்லாம் அவரிடத்தில் சென்று காதலை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொறுமையாக அவரை பற்றி முழுவதுமாக தெரிந்துகாெண்டு அவர் உங்களுக்கு செட் ஆவாரா அல்லது அவருக்கு உங்கள் மீது ஒரே மாதிரியான உணர்வு இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொண்டு பின்னர் அவரிடத்தில் காதலை தெரிவிக்கலாம். 


சரியான நேரம்:


காதலை தெரிவிக்க சரியான நேரம் காலம் எதுவுமே தேவையில்லை. நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் சமயத்தில், எந்த கவனக்குறைவும் இல்லாமல் இருக்கும் போது ப்ரப்போஸ் செய்யலாம். 


மேலும் படிக்க | உயிரை பறிக்கும் டாக்ஸிக் வேலை கலாச்சாரம்! இதிலிருந்து தப்பிப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ