Yoga Asanas To Reduce Belly Fat In Tamil : இன்றைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் பருமன் (Weight Loss Tips). குண்டான உடல் நமது தோற்றத்தை (Yoga For Slim Belly) கெடுப்பது மட்டுமின்றி நீரிழிவு, இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதற்கு முக்கிய காரணமே சந்தையில் கிடைக்கும் பொரித்த உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதே ஆகும். அதுமட்டுமின்றி இதனுடன் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து லேப்டாப்பில் வேலை செய்வது, தவறான வாழ்க்கை முறை போன்றவையும் உள்ளடங்கும். இதனால் வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் தேவையற்ற கொழுப்பு சேர்வதால் தொப்பை ஏற்படுகிறது. (How to Lose Weight Fast in 3 Simple Steps)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொப்பையைக் குறைக்க நமது அன்றாட வாழ்க்கை முறையை மாற்றி ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் யோகா பயிற்சிகளை செய்வது போன்றவற்றை செய்வது மிகவும் முக்கியமாகும். குறிப்பாக உடற்பயிற்சி மற்றும் யோகா ஆசனங்கள் செய்வது நல்ல ஆரோக்கியத்திற்கு வழிவகுக்க உதவும். எனவே தான் இதுபோன்ற உடல் பருமன் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க எளிமையான உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்களை தினமும் காலையில் மறக்காமல் செய்ய வேண்டும். இந்நிலையில் அசிங்கமாக தொங்கும் தொப்பையில் இருந்து விடுபட எளிதான 3 யோகாசனங்களை செய்வது அவசியமாகும். இந்நேரத்தில் சில யோகாசனங்களை தினமும் பாலோ செய்ய வேண்டும். அவை என்னென்ன? என்பது குறித்து இப்போது அறிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | உடல் எடை சட்டுனு குறைய இந்த வேர் காய்கள் உதவும்: கண்டிப்பா சாப்பிடுங்க


தொப்பையை குறைக்க உதவும் யோகாசனங்கள் | Yoga Exercises To Reduce Belly Fat


1. வக்ராசனம், மேரு வக்ராசனம் :
இந்த ஆசனம் தொப்பை கொழுப்பை குறைக்க பக்காவான யோகா ஆசனம் ஆகும். அதுமட்டுமின்றி இவை தசைகளை வலுவாக வைத்திருக்க உதவும். மேரு வக்ராசனத்தை தினமும் செய்து வந்தால் உடலுக்கு பல நன்மைகளை செய்யும். 


எப்படி செய்வது: முதலில் யோகா மேட்டில் அமர்ந்து இரு கால்களையும் நேராக நீட்டி நிமிர்ந்து உட்காரவும். பின்னர் இரண்டு கால்களையும் பிரிக்கவும். பின்னர் வலதுகையால் இடதுகால் கட்டை விரலையும், இடதுகையால் வலதுகால் கட்டை விரலையும் மாறி மாறி தொட வேண்டும். முகத்தை நன்றாக திருப்பி, விரல்களைப் பார்க்க வேண்டும்.


2) சக்கி சலனாசனா : இந்த யோகாசனம் தொப்பையை குறைக்க உதவும், மேலும் முதுகையும் பலப்படுத்த உதவும். 


எப்படி செய்வது: இந்த ஆசனத்தை செய்ய, முதலில் தரையில் கால் நீட்டி அமந்து, நீண்ட மூச்சை இழுத்து விட்டபின் கால்களை விரித்து 'V' வடிவத்தில் வைக்கவும். இப்போது இரு கைகளையும் இணைத்து நேராக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உடலை, இடுப்பு வரை வட்ட வடிவத்தில் சுழற்றுங்கள். 


3) புஜங்காசனம் : புஜங்காசனத்தில் உடலின் ஒவ்வொரு பகுதியும் பங்கேற்கிறது. மேலும் தினமும் இந்த யோகாசனத்தை செய்து வந்தால் உடல் எடை குறைந்து, தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும். 


எப்படி செய்வது: முதலில் குப்புற படுத்துக் கொண்டு, உங்கள் கால்களை நேராக இணைக்கவும். அதன் பிறகு உள்ளங்கைகளை மார்புக்கு அருகில் இருபுறமும் வைத்துக் கொள்ளவும். இப்போது மூச்சை உள்ளிழுத்து மேலே உயர்த்தி பின்னோக்கி வளைக்க வேண்டும்.


மேலும் படிக்க | 1 ஸ்பூன் ஆளி விதையில் ஓராயிரம் நன்மைகள், இப்படியும் சாப்பிடுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ