தேசிய நெடுஞ்சாலையில் டிரைவர் சீட்டில் ஆளே இல்லாமல் ஓடும் காரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், சாலையில் ஓட்டுனர் இல்லாமல் ஒரு கார் சாலையில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரளாக பரவி வருகிறது. 


இந்த வீடியோவை தாகூர் செர்ரி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பழைய பிரீமியர் பத்மினி கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்கிறது. ஆனால், டிரைவர் சீட்டில் யாரும் இல்லை. கோ டிரைவர் சீட்டில் மட்டும் வயதான முதியவர் அமர்ந்திருக்கிறார். காரின் பின்னால் இருந்து பார்க்கும் போது டிரைவர் இல்லாமல் காரை யார் இயக்குகிறார்கள் என்ற குழப்பம் ஏற்படுகிறது. 



ALSO READ | Viral Video: யானையின் மீது யோகா செய்யும் போது கீழே விழுந்த ராம்தேவ்..!


இதையடுத்து, அந்த காரை பின் தொடர்ந்து செல்லும் வாகனத்தில் இருப்பவர்கள் காரின் அருகே சென்று பார்க்கும் போது தான் தெரிகிறது. கோடிரைவர் சீட்டில் இருப்பவர் ஸ்டியரிங் மூலம் காரை இயக்கிக்கொண்டிக்கிறார். பொதுவாக நாம் இயக்கும் கார்களில் டிரைவரிடம் தான் அனைத்துக் கட்டுப்பாடுகளும் இருக்கும். ஆனால், கார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் டிரைவருக்கு எப்படி அத்தனை கட்டுப்பாடுகளும் கொடுக்கப்பட்டுள்ளதோ, அதேபோல கோ டிரைவர் சீட்டில் அமர்ந்திருப்பவர்களுக்கும் இருக்கும்.


புதிதாக டிரைவிங் கற்பவர்கள் ஏதாவது தவறு செய்தால் கோடிரைவர் சீட்டில் அமர்ந்திக்கும் பயிற்சியாளர்கள் காரை கட்டுப்படுத்துவார்கள். அப்படி தான் அந்த முதியவரும் கட்டுப்படுத்துகிறார் என்று கருத்திட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.