2K கிட்ஸ் பசங்களுக்கு... உறவினர்களை கண்டாலே அலர்ஜி... ஏன் தெரியுமா? - 4 முக்கிய காரணங்கள்
Lifestyle News: உறவினர்களிடம் இருந்து இன்றைய தலைமுறையினர் எப்போதும் ஒரு இடைவெளியை கடைபிடிக்க முக்கியமான 4 காரணங்களை இங்கு காணலாம்.
Lifestyle News In Tamil: இன்றைய தலைமுறையினர் Gen Z என்றழைக்கப்படுகிறார். அதாவது, 1981ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டுவரை பிறந்தவர்களை Millennials என்றழைப்பார்கள். அதே நேரத்தில் 1997ஆம் ஆண்டில் இருந்து 2012ஆம் ஆண்டுவரை பிறந்தவர்களை Gen Z என்றழைப்பார்கள். நம்மூரில் Millenials தலைமுறையினரை 90s கிட்ஸ் என்றும் Gen Z தலைமுறையினரை 2K கிட்ஸ் என்றும் அழைப்பார்கள். Millenials மற்றும் Gen Z தலைமுறையினர் இடையேவே பெரும் வித்தியாசங்கள் நிலவும்.
தனித்துவமான 2K கிட்ஸ்
அதில் 90s கிட்ஸ் பெரும்பாலும் உறவினர்களுடன் ஒத்து வாழ்பவர்களாகவும், 2K கிட்ஸ் உறவினர்கள், சொந்தபந்தங்களிடம் இருந்து விலகி இருப்பவர்களாக கூறப்படுகிறது. இதில் விதிவிலக்குகள் நிறைய இருக்கலாம் என்றும் இது பொதுவான கூறப்படும் கருத்தாகும். அந்த வகையில், இந்த கால இளைஞர்கள் உறவினர்களை கண்டாலே பத்தடி தள்ளிப்போவதற்கான காரணம் என்னவாக இருக்கும்...?
அதைதான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம். அதாவது, Gen Z தலைமுறையினர் என்ற இக்கால இளைஞர்கள் உறவினர்களிடம் இடைவெளியை கடைபிடிப்பதற்கும், நண்பர்கள் இடையே நெருக்கத்தை கடைபிடிப்பதற்குமான 4 முக்கிய காரணங்களை இங்கு விரிவாக பார்க்கலாம். இதன்மூலம் இக்கால இளைஞர்களின் மனநிலையை குடும்பத்தினரும் சற்று புரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | புண்பட்ட மனதை தேற்ற கடினமான தருணங்களில் ‘இந்த’ விஷயத்தை செய்யுங்கள்!
1. தொழில்நுட்ப வளர்ச்சி
இந்த காலத்தில் சமூக வலைதளங்களில் இல்லாதவர்களே யாருமில்லை. ஸ்மார்போன் வைத்திருக்கும் அனைவருமே சமூக வலைதள கணக்குகளை வைத்திருக்கின்றனர். இதில், Gen Z தலைமுறையினர்தான் சமூக வலைதளங்களில் அதிகம் இருக்கின்றனர். அவர்கள் அங்கு தங்களின் நண்பர்களுடன்தான் அவர்கள் தங்களின் உணர்வுகளையும், எண்ணங்களையும் பகிர்ந்துகொள்கின்றனர். நண்பர்களிடம் இருந்தும் அதற்கு உரிய மதிப்பும் கிடைக்கிறது. ஆனால் அந்த மதிப்பு சமூக வலைதலங்களில் இருக்கும் உறவினர்களிடம் வரவே வராது. இதுவும் அவர்கள் உறவினர்களிடம் இருந்து தூரம் செல்வதற்கு முக்கிய காரணம்.
2. உறவினர்களின் மனநிலை
இன்றைய தலைமுறையினருக்கு உறவினர்களின் சுபாவம் பெரிதாக பிடிப்பதில்லை. மற்றவர்களை பார்த்து பொறாமை கொள்ளும் சுபாவம், எதற்கெடுத்தாலும் குறைசொல்லும் மனநிலையை Gen Z இளைஞர்கள் வெறுக்கிறார்கள். தங்களை எவ்வித முன் அனுமானமும் இன்றி அணுகும் மனிதர்களையே அவர் நேசிக்கின்றனர். அதுதான் சரியான அணுகுமுறை என்றும் அவர்கள் நினைக்கின்றனர். நண்பர்கள் அவர்களை முன் தீர்மானம் இன்றி அணுகுவார்கள்.
3. மாற்றுச் சிந்தனை
வாழ்க்கைமுறை குறித்து, காதல் - திருமணம் குறித்து, பணி கலாச்சாரம் குறித்து இன்றைய Gen Z தலைமுறையினர் காத்திரமான சிந்தனை முறைகளை கொண்டிருக்கின்றனர். முற்போக்காக அவர் முன்னெடுக்கும் சிந்தனைகள் இந்திய குடும்ப அமைப்புக்கே உரிய பிற்போக்குத்தனத்தை ஏற்றுக்கொள்ளாது, இதுதான் பெரும்பாலான உறவினர்களை இன்றைய தலைமுறையினர் வெறுக்கின்றனர்.
4. உறவினர்களின் எதிர்பார்ப்புகள்
டாக்டர் ஆக வேண்டும், இந்த வேலைக்கு போக வேண்டும் என உறவினர்கள் தங்கள் மீது வைக்கும் எதிர்பார்ப்புகளை இன்றைய தலைமுறையினர் ஒரு பாரமாக நினைக்கின்றனர். எவ்வித அழுத்தமும் இன்றி வாழ்க்கை அணுகும் ஒரு கனவு சார்ந்த சிந்தனையை இன்றைய Gen Z தலைமுறையினர் கொண்டிருக்கின்றனர். இதுவும் உறவினர்களிடையே இடைவெளியை உண்டாக்க இந்த தலைமுறையினரை தூண்டுகிறது எனலாம்.
மேலும் படிக்க | எந்த கிரீமும் வேண்டாம்! பால் மட்டும் போதும்! உங்கள் முகம் பளபளப்பாக மாறும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ