90s கிடஸ் vs 2K கிட்ஸ்: டேட்டிங்கில் யார் கில்லி? - புட்டு புட்டு வைக்கும் புள்ளிவிவரம்!

Millennials மற்றும்  Gen Z இரண்டு தலைமுறையினர்களில் டேட்டிங் ஆப் மூலம் தங்களது இணையரை தேர்ந்தெடுப்பதில் செயல்படும் விதம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 26, 2023, 08:07 PM IST
  • QuackQuack என்று டேட்டிங் ஆப் இந்த வாக்கெடுப்பை நடத்தியது.
  • Millennials மிகவும் சீரியஸான ரிலேஷன்ஷிப்பை டேட்டிங் ஆப்பில் தேடுகின்றனர்.
  • Gen Z தலைமுறையினர் தங்களுக்கு என்று உறுதியான கருத்துகளை வைத்துள்ளனர்.
90s கிடஸ் vs 2K கிட்ஸ்: டேட்டிங்கில் யார் கில்லி? - புட்டு புட்டு வைக்கும் புள்ளிவிவரம்! title=

1981ஆம் ஆண்டில் இருந்து 1996ஆம் ஆண்டுவரை பிறந்தவர்கள் பொதுவாக  Millennials என்றழைக்கப்படுகின்றனர். 1997ஆம் ஆண்டில் இருந்து 2012ஆம் ஆண்டு பிறந்தவர்களை Gen Z என்றும் அழைக்கின்றனர். தற்போது, இணையத்தில் உலாவும் 90s கிட்ஸ், 2K கிட்ஸ் கான்சப்பட்டை போன்றது,. ஆனால், இது உலகம் முழுவதற்குமான கணக்கீடாகும். 

Millennials மற்றும்  Gen Z இரண்டு தலைமுறையினருக்கும், தங்கள் டேட்டிங் பழக்கங்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது என்றாலும் அதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் பொதுவெளியில் தங்களின் இணையகளை தேடுவதை விட, ஆன்லைன் டேட்டிங்கை விரும்புவதுதான் என்பதை சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

18 மற்றும் 35 வயதுக்கு இடைப்பட்ட வயதில் பணிபுரிந்துகொண்டிருப்பவர்கள், மாணவர்கள் என டேட்டிங் செயலியின் 10 ஆயிரம் பயனர்களை அவர்களின் வாழும் நகரங்களின் அடிப்படையில் அடுக்கு 1, அடுக்கு 2 என இரண்டு பிரிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், Gen Z தலைமுறையினர்தான் முதல் இடத்தைப் பிடித்தனர். 23 வயதுக்குட்பட்ட பங்கேற்பாளர்களில் கிட்டத்தட்ட 59 சதவீதம் பேர், ஒருவரைச் சந்திப்பதில் தங்களின் விருப்பமான முறையாக டேட்டிங் ஆப்ஸைத் தேர்ந்தெடுத்துள்ளனர். Millennials நான்கு சதவீதம் பேர்தான் அதனை தேர்வு செய்துள்ளனர்.  

சில டேட்டிங் செய்யும் Millennials மேட்ரிமோனியல் இணையதளங்களைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் சிலர் இன்னும் பழங்கால சந்திப்புகளையும் மற்றும் நண்பர்கள் மூலம் அறிமுகம் செய்யப்படுபவர்களையே விரும்புகிறார்கள்.

Causual vs Serious 

டேட்டிங்க் ஆப்பில் உள்ள Millennials தலைமுறையில் 43 சதவீதம் பேர், நீண்டகால மற்றும் உறுதியான இணையரை கண்டறிய இந்த ஆப்பை பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்கள் சாதாரண டேட்டிங்கில் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு முக்கிய காரணம், அவர்களின் வயது.

மேலும் படிக்க | Flirting Day: காதலும் வேண்டாம் ஊடலும் வேணாம் நான் ஊர்சுத்தப் போறேன்!

படித்துக்கொண்டிருக்கும் Gen Z இளைய தலைமுறையினர் 54 சதவிகிதம் பேர், ஆன்லைனில் எப்படிப்பட்ட நபரைச் சந்திக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் தீவிரமான ரிலேஷன்ஷிப்/சாதாரண டேட்டிங்க் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் அவர்கள் இணைந்து வாழ்வதற்கு முன்னரே, இணையர் குறித்து ஆராய விரும்புகிறார்கள். 18 முதல் 22 வயதுடையவர்களில் ஏறக்குறைய 31 சதவீதம் பேர் துரிதமான டேட்டிங்கை முயற்சிக்கின்றனர். Gen Z டேட்டர்கள் ஒரே நேரத்தில் பல நபர்களுடன் பேசுவதை விரும்புகிறார்கள் என்று கணக்கெடுப்பு கூறுகின்றன. 

Gen Z தலைமுறையின் முக்கிய தேவை

வாழ்க்கை குறித்த கண்ணோட்டங்கள் என்று வரும்போது, Gen Z டேட்டர்களை விட Millennials மிகவும் நிதானமாகவும், எதையும் ஏற்றுக்கொள்பவர்களாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. 36 சதவீத பெண் Gen Z டேட்டர்கள், அடிப்படை இலட்சியங்கள் மற்றும் தார்மீக விழுமியங்கள் மீது எதிர் கருத்துக்களைக் கொண்ட ஒருவரை டேட் செய்ய விரும்ப மாட்டோம் என தெரிவித்துள்ளனர். 

Gen Z டேட்டர்கள் வலுவான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். மற்றவர்களின் வாழ்க்கை குறித்த பார்வைகளை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். ஒரே மாதிரியான ரசனைகள் மற்றும் தனது வைப்பிற்கு செட்டாக கூடியவர்களை தான் அவர்கள் டேட் செய்ய விரும்புகிறார்கள். GenZ டேட்டர்களில் 52 சதவீதம் பேர் சூற்றுச்சுழல் சார்ந்த பிரச்னையில் மாறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டவர்களுடன் டேட் செய்ய மறுப்பதாகவும் வாக்கெடுப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன. 

Millennials டேட்டர்களில் 42 சதவீதம் பேர், தங்களுக்கு எதிரில் இருப்பவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதில் நம்பிக்கை வைத்துள்ளனர். மாறுபட்ட நம்பிக்கைகள் எப்போதும் மோதல்களை ஏற்படுத்தாது எனவும் திறந்த மனதுடன் இருந்தால்தான் அவர்களின் மனதை அறிந்துகொண்டு, அவர்களை புரிந்துகொள்ள உதவும் என நினைக்கின்றனர். 

முதல் டேட்டில் யார் அசத்துகிறார்கள்?

முதல் டேட் என்று வரும்போது, இரண்டு அடுக்கு நகரங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் முன்னணியில் உள்ளனர். இந்த பெண்களில் 29 சதவீதம் பேர் எப்போதும் முதல் டேட்டில் வரும் செலவை பகிர்ந்துகொள்ள முன்வருகிறார்கள். ஆனால், GenZ தலைமுறையில் 12 சதவீத பெண்களே செலவை பகிர்ந்துகொள்ள முன்வருகின்றனர். 

மறுபுறம், முதல் டேட்டுக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் போது, ஆடம்பரமான உணவகங்கள், காபி ஷாப்களை 2 சதவீத Millennials பெண்கள்தான் தேர்வு செய்கிறார்கள். Gen  பெண் டேட்டர்களில் 26 சதவீதம் பேர் மிதமான மலிவு விலையில் சில இடங்களைத் தேர்ந்தெடுப்பதாக கூறப்படுகிறது. 

QuackQuack டேட்டிங் ஆப்பின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, ரவி மிட்டல்,"கடந்த சில ஆண்டுகளில், 18 மற்றும் 22 வயதிற்கும் இடைப்பட்ட பயனர்களின் எண்ணிக்கை ஆப்பில் அதிகரிப்பைக் கண்டுள்ளோம். இரண்டு தலைமுறைகளின் டேட்டிங் முறைகளில் பெரிய வித்தியாசத்தை நாங்கள் கவனித்தோம். எங்கள் ஆப்பில் உள்ள Millennials மிகவும் பழமைவாதத்தை தூக்கிப்பிடிப்பவர்களாக உள்ளனர். பெரும்பாலும் தீவிரமான உறவுக்காக இங்கு தேடுகின்றனர். Gen Z பயனர்கள் சாதாரணமாக சேட் செய்கிறார்கள். டேட்டிங்கை தாண்டி நாடு முழுவதும் புதிய நண்பர்களை இங்கு உருவாக்கி கொள்கிறார்கள்" என்றார். 

மேலும் படிக்க | திருமணமானவர்களுக்கு இந்த வகை நீரிழிவு நோய் வராது - வல்லுநர்கள் கணிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News