Divorce Causes Problem And Solution : சமீப காலங்களில், பிரபலங்கள் பலர் பல ஆண்டுகளுக்கு பிறகு திருமண முறிவை அறிவிப்பது, மக்களிடையே உறவுகள் குறித்த கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 19 ஆண்டுகள் திருமண உறவில் இருந்த தனுஷ்-ஐஸ்வர்யா, 10 ஆண்டுகளுக்கு பிறகு பிரிய முடிவு செய்த ஜி.வி பிரகாஷ்-சைந்தவி, சமீபத்தில் 29 ஆண்டுகளுக்கு பிறகு விவாகத்து பெற இருப்பதாக அறிவித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான்-சாயிரா பானு என இந்த லிஸ்ட் நீண்டு காெண்டே செல்கிறது. இப்படி, காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளும், பிரிய முடிவு செய்வது ஏன்? இது போன்ற பிரச்சனைகள் முற்றிப்போவதற்கு முன்பு அதை ஆரம்பத்திலேயே சரிசெய்வது எப்படி? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேச்சுத்தொடர்பு இல்லாமல் போவது:


பிரச்சனை: பல ஆண்டுகள் திருமண உறவில் இருப்பவர்கள், தங்களது உணர்ச்சிகளை, தங்கள் வாழ்வில் நடந்த தினசரி நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்ளாமல் போகின்றனர். இதனால், உணர்ச்சி ரீதியாக இவர்கள் தள்ளிப்போய் விடுகின்றனர். 


தீர்வு: 


  • இருவரும் தங்கள் உணர்வுகள் குறித்து அடிக்கடி பேச வேண்டும்.

  • ஒருவருடன் இன்னொருவர் பேசிக்கொள்ளும் போது முழு கவனமும் அந்த பேச்சில் இருக்க வேண்டும்.

  • இருவருக்கும் பொதுவான ஒரு ஆலோசகரை வைத்து பேசலாம்.


தள்ளிப்போகுதல்: 


பல ஆண்டுகள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது அவர்களின் பிடித்தங்கள், இலக்குகள் மாறலாம். இதனால் இருவரும் தனித்தனி வாழ்க்கையை வாழ்வது போல இருக்கலாம்.


தீர்வு: 


  • இருவருக்கும் பிடித்தமான விஷயங்களை ஒன்றாக செய்ய வேண்டும்.

  • இருவரும் ஒரே இலக்கை வைத்து அதை நோக்கி பயணிக்க வேண்டும்.


தீர்க்கப்படாத சண்டைகள்:


பல நேரங்களில், பழைய சண்டைகள் அல்லது விவாதங்கள் முடிக்கப்படாமல் இருந்திருக்கும். இதனால், பல ஆண்டுகளுக்கு பிறகு பிரச்சனை பெரிடாகலாம். 


தீர்வு:


  • என்ன பிரச்சனையோ அதை நேரடியாக பேச வேண்டும். 

  • இது குறித்து பேசும் போது இருவரும் அவர்களின் தனிப்பட்ட உணர்வுகளை பகிர வேண்டும்.

  • மன்னிப்பு என்ற ஒரு வழியும் இருக்கிறது. 


மேலும் படிக்க | விவாகரத்துக்கான 5 முக்கிய காரணங்கள்..!


நிதி பிரச்சனை:


இருவரும் செய்யும் செலவுகள் வேறு படலாம். ஒருவர் அதிகமாக செலவு செய்தால், இன்னொருவர் சேமித்து கொண்டிருப்பர். இதனால், பிரச்சனைகள் வரும். 


தீர்வு:


  • இருவரும் ஒன்றாக நிதி மேலாண்மைக்கு ஒரு திட்டம் தீட்ட வேண்டும். 

  • இருவரும் அவரவர் செலவுகள் மற்றும் வரவுகள் குறித்து பேசிக்கொள்ள வேண்டும்.


நெருக்கம் ஏற்படுவதில் சிக்கல்:


பிரச்சனை : இருவருக்குள்ளூம் வருடங்கள் அதிகமாக, நெருக்கம் குறைவாகி விடலாம். 


தீர்வு: 


  • இருவரும் உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நெருக்கமாக நேரம் ஒதுக்க வேண்டும்.

  • இருவருக்கும் என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பதை பேசிக்கொள்ள வேண்டும்


துரோகம்:


ஒரு உறவு, நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகக்கூடியது. இதை உடைக்கும் ஒன்று, ஒரு பார்ட்னர் இன்னொருவருக்கு துரோகம் செய்வது. 


தீர்வு:


  • மன்னிக்க முடிந்தால் மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், உடைந்து போன நம்பிக்கையை மீண்டும் யாராலும் ஒட்ட வைத்துவிட முடியாது. 


புறக்கணிப்பது: 


ஒரு விஷயம் நமக்கு அதிகமாக கிடைக்கும் போது அதை நாம் புறக்கணிப்போம். அதை சாதாரணமாக எடுத்துக்கொள்வோம். இதனாலும், ஒரு உறவானது உடைந்து போகலாம். 


தீர்வு: 


  • அடிக்கடி, தங்கள் பார்ட்னருக்கு பிடித்த விஷயங்களை இருவரும் செய்ய வேண்டும்.

  • வெளியில் டேட்டிங் செய்ய வேண்டும்

  • யார் இன்னொருவரை சாதாரணமாக எடுத்துக்கொண்டாரோ அவர் அதற்கு பொருப்பெடுத்துக்கொண்டு அதை சரிசெய்ய வேண்டும். 


மேலும் படிக்க | பிரபலங்கள் ஏன் அதிகமாக விவாகரத்து செஞ்சுகிறாங்க தெரியுமா? 8 முக்கிய காரணங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ