பெண்கள் சனிக்கிழமை தாலி கயிறு மாத்தலாமா? இந்த தப்பை செஞ்சிடாதீங்க
Thali change Tips ; பெண்கள் தாலி கயிறு மாற்றுவதற்கு என ஒருசில சம்பிரதாயங்கள் இருப்பதால் அதனை பின்பற்றியே தாலி கயிறு மாற்றுவார்கள்.
தாலி கயிறு மாற்றுவதற்கு பொதுவாகவே ஒருசில சம்பிரதாயங்கள் வழிவழியாக பெண்களால் பின்பற்றப்படுகிறது. ஒரு வீட்டில் இருக்கும் மூத்த பெண்கள் இளம் பெண்களுக்கு தாலி கயிறு எப்படி மாற்ற வேண்டும், எந்த நாளில் மாற்ற வேண்டும், தாலி கயிறு மாற்றும்போது என்னென்ன சம்பிரதாயங்கள் கடைபிடிக்க வேண்டும், பழைய தாலியை என்ன செய்ய வேண்டும், தாலி கயிறு மாற்றாமல் இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்ற சகுணத்தையும் சேர்த்தே சொல்லிக் கொடுப்பார்கள். அதனால், கணவரின் ஆயுளையும், குடும்பத்தின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தாலி கயிறு மாற்றுவதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் பெண்கள்.
தாலி கயிறு எப்போது மாற்ற வேண்டும்?
தாலி கயிறு அணிந்து பல நாட்கள் ஆகிவிட்டது என்றால், அது கருப்பு நிறமாக மாறத் தொடங்கும். அந்த நேரத்தில் நல்ல நாட்கள் ஏதேனும் வந்தால் அந்த நாளில் தாலிக் கயிறு மாற்றிக் கொள்ளலாம். தாலி கயிறு முழுவதுமாக அழுகிய நிலை அடையும் வரைவிட க்கூடாது. முன்கூட்டியே மாற்றிவிட வேண்டும். இல்லையென்றால் குடும்பத்தில் கஷ்டம், கணவருக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் எல்லாம் வரும். நல்ல நாடகள் இல்லையென்றாலும் செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் தாலிக் கயிறு மாற்றலாம். இந்த நாட்களில் காலை அல்லது மாலை நேரத்தில் புது தாலிக் கயிறு அணிந்து கொள்ளலாம். எமகண்டம், ராகு காலம் நேரத்தில் தாலி கயிறு மாற்றக்கூடாது.
தாலி கயிறு எப்படி மாற்ற வேண்டும்?
வீட்டில் இருக்கும் இளம் பெண்கள் தாலி கயிறு மாற்றுவதற்கு முன்பு வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டாலே சொல்வார்கள். குளித்துவிட்டு பூஜை அறையில் அமர்ந்து பழைய தாலி கயிறின் முடிச்சை அவிழ்த்து அதனை கழுத்தில் கட்டுவதற்காக அணியும் புது தாலிக் கயிறுக்குள் விட்டுவிட வேண்டும். பின்னர் புது தாலிக் கயிறை கட்டி முடித்தவுடன் அதற்கு மஞ்சள் குங்குமம் தடவிவிட்டு, பழைய தாலி கயிறை கழுத்தில் இருந்து எடுத்து கீழே வைத்துவிட வேண்டும். புது தாலிக் கயிறில் தாலிக்காசுகள், குண்டுமணி இருந்தாலும் சேர்த்து கட்டிக்கொள்ளலாம். பழைய தாலிக் கயிறை அருகில் இருக்கும் பூ செடிகள் மீது போட்டுவிடலாம்.
சனிக்கிழமை தாலி கயிறு மாற்றலாமா?
தாலி கயிறு மங்களகரமான நாளில் மட்டுமே மாற்ற வேண்டும். சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த நாள். இந்த நாளில் தாலி கயிறு மாற்றமாட்டார்கள். திருமணமே குரு திசையில் தான் பார்த்து நடத்தி வைப்பார்கள். குருவும், சனியும் பகை கிரகங்கள் என்பதால் குருவுக்கு உகந்த விஷயங்களை சனி பகவானுக்கு உகந்த நாளில் செய்யவே மாட்டார்கள். சனி நீதியின் கடவுள். அவருக்கான நாளில் நீங்கள் செய்வதை திருந்த செய்யாதபோது, தெரிந்து அல்லது தெரியாமல் செய்த தவறுக்கும் நீங்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். அது தேவையில்லாத விபரீதம் மற்றும் சங்கடத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் என்பதால் சனிக்கிழமைகளில் தாலிக் கயிறு மாற்ற மாட்டார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ