Aadhaar Hackathon 2021: ரூ. 3 லட்சம் வெல்ல சூப்பர் வாய்ப்பு, முழு விவரம் இதோ
முதல் ஆதார் ஹேக்கத்தான் அக்டோபர் 28 (நள்ளிரவு) முதல் அக்டோபர் 31 வரை நடைபெறும்.
Aadhaar Hackathon 2021: இந்தியாவில் உள்ள இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி!! இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) முதல் ஆதார் ஹேக்கத்தான் 2021 (Aadhaar Hackathon 2021) வியாழக்கிழமை தொடங்கியது.
இந்த முதல் ஆதார் ஹேக்கத்தான் அக்டோபர் 28 (நள்ளிரவு) முதல் அக்டோபர் 31 வரை நடைபெறும்.
"புதுமுறை காணலே வாழ்வின் ஆதாரம். புதுமை, அதிநவீன ஓப்பன் சோர்ஸ் தொழில்நுட்பத்துடன் கலந்திருப்பது, மக்கள் எதிர்கொள்ளும் சில சவால்களைத் தீர்க்க உதவும். UIDAI நடத்தும் முதல் Hackathon 2021 இல் வந்து கலந்துகொள்ளுங்கள். இதில் கலந்துகொள்வதின் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தின் ஒரு பகுதியாக மாறும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்" என்று ஆதார் ஹேக்கத்தான் 2021 இணையதளத்தில் கூற்ப்பட்டுள்ளது.
ஆதார் ஹேக்கத்தான் 2021
குழு பதிவு இப்போது முடிந்துவிட்டது! இருப்பினும், நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தால், https://hackathon.uidai.gov.in/manage என்ற இந்த இணைப்பிற்குச் சென்று பங்கேற்பாளர் விவரங்களைப் பார்க்கலாம்.
ALSO READ: ஆதார் அட்டையில் உள்ள போட்டோ நன்றாக இல்லையா; நொடியில் மாற்றலாம்..!!
ஹேக்கத்தான் இரண்டு பரந்த கருப்பொருள்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. பதிவு மற்றும் அங்கீகாரம் ஆகியவை இந்த இரண்டு வகைகளகும். இவற்றில் ஏதாவது ஒரு கருப்பொருளிலிருந்து ஏதேனும் ஒரு பிராப்ளம் ஸ்டேட்மெண்டை பங்குகொள்ளும் குழு சால்வ் செய்ய வேண்டும். குழுக்கள், தாங்கள் அளிக்கும் தீர்வை வொர்கிங் கோட் மூலம் விளக்க வேண்டும்.
ஆதார் (Aadhaar) ஹேக்கத்தான் 2021-க்கான பரிசுத் தொகை
ஒவ்வொரு கருப்பொருளிலும் பின்வரும் பரிசுகள் அளிக்கப்படும்.
முதல் பரிசு: ரூ 3,00,000
இரண்டாவது பரிசு: ரூ 2,00,000
மூன்றாவது பரிசு: இரண்டு அணிகளுக்கு ரூ.1,00,000
ஆதார் 2.0 முன்முயற்சியின் கீழ், அடுத்த கட்ட அடையாளம் மற்றும் அங்கீகார தளத்தை உருவாக்க, வெற்றி பெற்ற அணிகளின் உறுப்பினர்கள் ஆதார் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பைப் பெறக்கூடும். மேலும், வெற்றிபெறும் குழு உறுப்பினர்களுக்கு ஆதார் 2.0 பற்றிய முதல் உலகளாவிய மாநாட்டில் பங்கேற்க அழைப்பிதழ் கிடைக்கும். அனைத்து அணிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
ALSO READ: Aadhaar விதிகளில் மாற்றம்: மாற்றத்தால் மக்களுக்கு லாபம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR