Ramadan 2021: ரம்ஜான் நோன்பில் நாள் முழுதும் உற்சாகமாக இருக்க Food Tips
புனித ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமாலான், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது.
புனித ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமாலான், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது இஸ்லாமிய மதத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி நபிகள் நாயகம் முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ரமலான் கொண்டாடப்படுகிறது என்பதைவிட, மாதம் முழுவதும் நோன்பு அனுசரிப்பது, சுய கட்டுப்பாடு, ஈகை, உண்ணா நோன்பு என ஒருவரின் ஆன்மீக உள் தேடலுக்கான பண்டிகை ரம்ஜான்.
Also Read | Brown Rice vs White Rice: உங்கள் உடல்நலனுக்கு எந்த அரிசி சிறந்தது?
விடியற்காலை முதல் சாயங்காலம் வரை உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் உடலின் நச்சுத்தன்மையை நீக்குகிறது என்று கூறப்படுகிறது. இதற்காக சிறுவயதில் இருந்தே இஸ்லாமியர்கள் தங்கள் குழந்தைகளை தயார் செய்துவிடுகின்றனர்.
சூரிய உதயத்திற்கு முன்பே உணவை சாப்பிட்டால் (இது `செஹ்ரி அல்லது சுஹூர் என்று அழைக்கப்படுகிறது). சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நோன்பை துறப்பது, அதாவது நாள் முழுவதும் நீர் கூட அருந்தாமல் நோன்பு நோற்றுவிட்டு, மாலையில் உணவு உண்பது இஃப்தார் என அழைக்கப்படுகிறது.
ஆயினும், புனித மாதத்தில் உண்ணாமல் நோன்பு இருப்பது அவ்வளவு எளிதானது அல்ல.
கோடையில் ரமழான் மாதத்தில் உண்ணா நோன்பு இருப்பது என்பது கடினமானதே. உடலில் உள்ள நீர், வியர்வையாக வெளியேறும் நிலையில், எச்சில் கூட தொண்டைக்குள் செல்லாமல் கடுமையான உண்ணாவிரதம் இருப்பது அனைவராலும் முடியாது.
Also Read | இரும்பு பாத்திரத்தில் சமைத்து உண்பது உடலுக்கு மிகவும் நல்லது; ஆனால்......
உடலில் நீர் குறைவதால் பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருக்க சில உதவி குறிப்புகள்:
போதுமான தண்ணீரைக் குடிக்கவும்: சுஹூரின் போது, அதாவது காலையில் சூரிய உதயத்திற்கு முன்னதாக உணவு உண்ணும்போது போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பல்வேறு ஆய்வுகளின்படி, குறைந்தபட்சம் 60 அவுன்ஸ் அல்லது கிட்டத்தட்ட லிட்டர் தண்ணீர் கோடை பருவத்தில் வரும் நோன்பின் போது பருகுவது, நாள் முழுவதும் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தக்க வைக்க உதவும். தண்ணீர் அருந்தும்போது கொஞ்சம் கொஞ்சமாக நிதானமாக அருந்தவேண்டும். ஒரேயடியாக நீரை குடித்துவிடக்கூடாது.
ஆரோக்கியமான ஆனால் எளிதில் செரிக்கக்கூடிய உணவை உண்ணவேண்டும். அதிக அளவில் உணவை சாப்பிடுவது நாள் முழுவதும் உடலுக்கு போதுமான சத்தைக் கொடுக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. உண்ணும் உணவில் நார்ச்சத்து (fibre diet) நிறைந்திருப்பது நாள் முழுவதும் சோர்வு ஏற்படாமல் இருக்க உதவும்.
பேரிச்சை: ரமலான் நோன்பின்போது பேரிச்சம்ப்ழம் உண்பது அவசியமானது. அதனால்தான் ரமழான் மாதத்தில் பேரிச்சம்பழத்தை உணவில் சேர்ப்பதை முகமது நபி (Prophet Mohammad) ஒரு பாரம்பரியமாகவே வைத்திருந்தார். விஞ்ஞான ரீதியாகவும், பேரிச்சம்பழத்தை நோன்பு வைக்கும்போது சாப்பிடுவது அவசியமானது என்று கூறப்படுகிறது. பேரிச்சம்பழத்தில் தாமிரம், செலினியம் மற்றும் மெக்னீசியம் என அவசியமான சத்துக்களுடன் எலும்புகளுக்கு ஊட்டம் தரும் வைட்டமின் கே சத்தும் நிறைந்துள்ளது.
அதோடு, குளுக்கோஸின் இயற்கையான மூலமாக இருக்கும் பேரிச்சம்பழம், மனித உடலில் செல்கள் திரவங்களை சேமிக்க உதவுகிறது. எனவே, இது குடலில் சோடியம் மற்றும் நீரின் அளவை அதிகரிக்கும்.
ரமலான் நோன்பின்போது அதிகாலையில் எழுந்திருப்பதும் முக்கியமானது. அதிகாலை துயில் எழுவது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. ஆரோக்கியமாக இருப்பதற்கு போதுமான அளவு உறங்க வேண்டும் என்பதும் உண்மை தான். எனவே, ரமலான் மாதத்தில் தூக்கத்தையும் தியாகம் செய்துவிட வேண்டாம் என்பதை உறுதி செய்துக் கொள்ளவும்.
Also Read | கொரோனாவின் அறிகுறிகளைக் குணப்படுத்தும் இவற்றைப் பற்றித் தெரியுமா?
விடியற்காலையில் உண்ணும் முதல் உணவை ஜீரணிக்க மனித உடலுக்கு போதுமான நேரம் தேவைப்படுகிறது. எனவே, செஹ்ரியின் கடைசி 5 -10 நிமிடங்களில் அவசர அவசரமாக உணவுகளை சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும். அதேபோல் காலை உணவில் தயிரைத் கட்டாயம் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு ஸ்பூன் தயிர் பல அதிசயங்களைச் செய்யக்கூடிய அற்புத நன்மைகளைக் கொண்டது. உங்கள் சேஹ்ரி உணவின் முடிவாக தயிர் சாப்பிடுவது விஞ்ஞான ரீதியாக சரியானது மற்றும் பயனுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் பகல் முழுவதும் சாப்பிடாமல் இருக்கும்போது வயிற்றில் ஏற்படும் அமிலச் சுரப்பை கட்டுப்படுத்தும் தன்மையைக் கொண்டது தயிரில் உள்ள தன்மை.
நாள்தோறும் ஒரு ஆப்பிள் மற்றும் வாழைப்பழம், உண்பது நீரிழப்பை விலக்கி வைக்கும். இந்த இரண்டு பழங்களிலும் குறைவான கலோரிகள், தேவையான அளவு நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன.
Also Read | தக்காளி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா?
அதேபோல, உப்பு, காரம் மற்றும் இனிப்பு உணவைத் தவிர்க்கவும் உணவில் மசாலா, உப்பு மற்றும் சர்க்கரை குறைவாக வைத்திருப்பது தாகம் ஏற்படாமல் இருக்க உதவும். இந்த வகையான உணவுகளில் உள்ள சோடியம், உடலுக்குள் திரவத்தை சமப்படுத்த உதவுகிறது. அதிக உப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது, உடலில் நீர் குறைந்துவிடுகிறது என்பதால் தாகம் அதிகரிக்கும்.
நீர்ச்சத்து கொண்ட வெள்ளரி, தக்காளி போன்ற நீர் நிறைந்த உணவுகள் மற்றும் தர்பூசணி, ஆரஞ்சு, கிவி போன்ற சாறு அதிகமுள்ள பழங்களை ரமலான் மாதத்தில் காலை உணவில் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
அனைவருக்கும் ரமழான் வாழ்த்துக்கள்! இந்த உணவு உதவிக் குறிப்புகளை கடைபிடித்தால் இந்த ரமலான் மேலும் சிறப்பாகும்.
Also Read | வைரலாகும் Anushka Sharmaவின் மனம் மயக்கும் மாயப் புன்னகை புகைப்படம்
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR