முட்டை வாங்கி தராததால், கணவனை கைவிட்டு சென்ற மனைவி...
பொதுவாக, ஆண்கள் கட்டுப்பாட்டில் பெண்கள் இருக்க விரும்புவதில்லை. குறிப்பாக உணவு பழக்கங்களில் பெண்கள் ஆண்களின் கைப்பிடிக்குள் இருக்க விரும்புவதில்லை. ஒருவேலை அதற்கான நிர்பந்தம் ஏற்படும் பட்சத்தில் விரல்களை பிறித்து பறந்து செல்லவும் பெண்கள் தயங்குவதில்லை.
பொதுவாக, ஆண்கள் கட்டுப்பாட்டில் பெண்கள் இருக்க விரும்புவதில்லை. குறிப்பாக உணவு பழக்கங்களில் பெண்கள் ஆண்களின் கைப்பிடிக்குள் இருக்க விரும்புவதில்லை. ஒருவேலை அதற்கான நிர்பந்தம் ஏற்படும் பட்சத்தில் விரல்களை பிறித்து பறந்து செல்லவும் பெண்கள் தயங்குவதில்லை.
அத்தகைய நிகழ்வு ஒன்று தான் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த இளம்பெண், தன்னை தன் கணவர் முட்டை உண்ண அனுமதிக்கவில்லை என கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
குறித்த இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறியதற்கு இரண்டு நாட்கள் முன்பு, வீட்டில் தனது கணவருடன் முட்டை உண்பதற்காக வாதிட்டதாகவும், பின்னர் வாக்குவாதம் முற்றி பிரச்சனை வலுத்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து சமயம் பார்த்து கணவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் அந்த இளம்பெண்.
இந்த விவகாரம் காவல்துறை காதுகளுக்கு எட்டிய பின்னர், இவ்விவகாரம் தொடர்பாக புகார் பதிவு செய்து இளம்பெண்னை தேடும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர். நான்கு மாத தேடலுக்கு பின்னர் அவர் தனது காதலருடன் இரண்டு கிராமங்கள் அடுத்து சாம்பிரங்ஜி பகுதியில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. திருமணத்திற்கு முன்பு இருந்தே இருவருக்கும் தொடர்பு இருந்ததாகவும், பின்னர் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து தற்போது அவர் மீண்டும் தனது காதலர் வசம் தஞ்சம் புகுந்ததகாவும் தெரிகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட கணவர் தினக்கூலி எனவும், தனது மனைவியில் தேவைப்படி தன்னால் தினமும் அவருக்கு முட்டை வாங்கி தர இயலவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். கணவரின் வருமை நிலையினை புரிந்துக்கொள்ளத மனைவில், இதனை காரணம் காட்டி மீண்டும் தனது காதலருடன் கைகோர்த்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.