அமெருக்கவில் இளம்பெண் ஒருவர் தனது உயிர் தோழியின் அப்பாவை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ் உறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது. 


திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்றும் கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இது போன்று ஒரு இளம் ஜோடிகள் தைகளின் திருமணத்தை விசித்திரமாக செய்து கொண்டுள்ளனர். 


அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் டெய்லர் என்ற பெண் தனது நெருங்கிய தோழியின் தந்தையை திருமணம் செய்துள்ளார். இந்த சம்பவம் திருமணம் ஆகாத இளசுகளை வெறுப்பில் ஆழ்த்தியுள்ளது. டெய்லர் (27), அமண்டா (30) ஆகிய இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிகின்றனர். நெருங்கிய தோழிகளாகவும் அவர்கள் பழகி வந்தனர். அமண்டாவின் தந்தை கெர்ன் லெய்மன் (54) என்பவரை டெய்லருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் லெய்மனுடன் டெய்லர் நட்பாகவே பழகி வந்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு லெய்மனை, டெய்லர் காதலிக்க தொடங்கியுள்ளார். 



தந்தை வயதுடைய ஒருவரை மகள் காதலிப்பதால் டெய்லரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல், டெய்லரின் தோழி அமண்டாவும் இந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனாலும், டெய்லரும் லெய்மனும் திருமணம் செய்து கொண்டே தீருவோம் என்று விடாப்பிடியாக இருந்த காரணத்தால் தோழி அமண்டா இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். 


இதன் பின்னர், டெய்லரும் - லெய்மனும் திருமணம் செய்து கொண்டனர். 27 வயது வித்தியாசம் கொண்ட தந்தை வயதில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொண்டது குறித்து டெய்லர் கூறும் போது, நான் முதன் முறையாக லெய்மனை பார்த்த போது அவர் அழகாக இருப்பதாக நினைத்தேன். எங்கள் வயது வித்தியாசம் குறித்து கவலை இல்லை. எங்களை பார்ப்பவர்கள் தந்தை - மகள் என நினைத்து விடுகின்றனர். 




மற்றவர்கள் எங்களைப் பற்றி நினைப்பதற்கு நான் கவலைப்படவில்லை. உயிர்தோழி எங்களை ஏற்றுக் கொண்டதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. லெய்மன் என் மீது பாசத்தோடும், அக்கறையோடும் இருக்கிறார் என்கிறார் டெய்லர். டெய்லர் நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவர் மிகவும் நேர்மையானவள். எனக்கு மனைவியாக மட்டுமில்லாமல் சிறந்த தோழியாகவும் டெய்லர் இருப்பதாக லெய்மன் கூறினார். 


இதற்க்கு முன்பாக இந்தியாவை சேர்ந்த நடிகரும், மாடலுமான 52 வயதுடைய மிலிந்த் சோமன் 26 வயது இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டது இளைஞர்கள் பலரை கடுப்பாக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.