சுற்றுச்சூழலை காக்கவில்லை எனில் துன்பம்தான்..உலக சுகாதார தினம் உணர்த்தும் உண்மைகள்!
World Environment Day 2023: உலக சுகாதார தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, இந்நாள் குறித்த தகவல்களும் செய்திகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி, உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அதை தவிர்க்கும் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிலான உலகளாவிய முயற்சியாகும். ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும், ஒரு குறிப்பிட்ட நாளில் ஏதேனும் ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு உலக சுகாதார தினத்தை கடைப்பிடித்து வருகிது. இது தனிநபர்கள், சமூகங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களை சுற்றுச்சூழல் குறித்த பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்குவிக்கிறது.
சுற்றுச்சூழலை காக்க வேண்டும்..
இயற்கை நாம் வாழ்வதற்கு எல்லா விதமான வளங்களை வழங்குகின்றது, இருந்தும் இயற்கையை, நாம் நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவருகிறோம். இயற்கை நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஐந்து பெரும் சக்திகளில் மாற்றங்கள் இருந்தாலும் இந்த இயற்கை நம்மை எப்போதுமே சம நிலையை தாண்டி நடத்துவதில்லை. பஞ்ச பூதங்கள் என கூறப்படும் நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஐந்தும் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை. இவையனைத்தும் ஈ,எறும்பு, நாய், பூனை போன்ற அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. இந்த உலகம் பல அற்புதங்கள் நிறைந்தவை, இந்த அழகான சுற்றுச்சூழலை பாதுகாப்பது மனிதர்களுடைய தலையாய கடமை.
மேலும் படிக்க | ஜூன் மாதத்தில் இந்தியாவில் இந்த 5 இடங்களை மறக்காம பாத்துருங்க!
நாம் சுற்றுசூலை சரியாக பயன்படுத்திக்கொண்டால், அது நம்மை காக்கும், காக்க தவறினால் சுற்றுச்சூழலை காக்க தவறும்போது சுனாமி, பூமி வெப்பமடைதல், நிலநடுக்கம் போன்ற பல இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாம் சுற்றியுள்ள இயற்கை வளத்தை நல்வழியில் பயன்படுத்தினால் நமக்கு எந்தவித உடல்ரீதியான நோயும் வராது. தவிர, சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொண்டால் மனரீதியான அமைதியும் ஏற்படுகிறது.
சுகாதாரத்தை பேண வேண்டும்..
மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களான கடற்கரை, காடுகள், மலைகள், ஏறி குளம் போன்ற இடங்கள் அதை பயன்படுத்துபவர்களால் அசுத்தமாக்கப்படுகின்றன. இது காற்று மாசுபாடு, மக்கள்தொகை பெருக்கம், கழிவுகளை அகற்றுதல், காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே சமநிலையை நிலைநாட்டும் நோக்கத்துடன் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவதே உலக சுற்றுச்சூழல் தினத்தின் நோக்கமாகும். சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் இன்றைய சூழ்நிலையில் காலநிலை மாற்றம் மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாகும். இயற்கை வாழ்விடங்களின் அழிவு, புவி வெப்பமடைதல், அதிக மக்கள் தொகை மற்றும் மாசுபாடு ஆகியவற்றின் வருகையுடன் கடந்த சில தசாப்தங்களாக காலநிலை மாற்றம் அதிகரித்துள்ளது. பூமியின் வெப்பநிலையை அதிகரிக்கும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். சுற்றுச்சூழல் மாற்றங்கள் பனிப்பாறைகள் உருகுதல், பருவநிலை மாற்றங்கள், தொற்றுநோய்கள் போன்ற அழிவுகரமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
சென்னையில் அதிகரித்த வெப்பம்..
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலும் வெப்பமும் வாட்டி வதைத்தன. நேற்று, வெப்பம் 31.3 டிகிரியை எட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூக ஆர்வலர் ஜி. சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், " சென்னையின் "Wet Bulb" வெப்பநிலை இந்த வெப்பநிலை 30 டிகிரியை தாண்டினால் மிகவும் சிக்கலாகும்; 32 டிகிரிக்கு மேல் சென்றால் சிக்கல் கூடுதலாகும்; 35 டிகிரியை தொட்டுவிட்டால் உடல் தன்னை குளிர்விக்கும் தன்மையை இழந்துவிடும் இந்த 'வெட்-பல்பு' நிலை 2050 வாக்கில் வரும் என்றுதான் நினைத்திருந்தோம், ஆனால் இப்போதே அந்த நிலையை நெருங்குவது கவலை அளிக்கக்கூடிய ஒரு செய்தி" என்று குறிப்பிட்டிருந்தார். இதை கருத்தில் கொண்டு அனைவரும் புவி வெப்பமயமாதலை தடுக்க சுற்றுப்புறத்தையும் சுகாதாரத்தையும் பாதுகாப்பாக வைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | இன்னும் 25 நாள் தான் டைம்... ‘இதை’ செய்யலைன்னா PAN கார்டு முடக்கப்படும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ