அதிர்ச்சி!! உலகின் அதிக மாசடைந்த முதல் 10 இடங்களில் 7 இந்திய நகரங்கள்
உலகின் மிக மோசமாக காற்று மாசடைந்த முதல் 10 நகரங்களில் 7 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளது. அதில் குர்கிராம் நகரம் முதல் இடத்தில் உள்ளது.
ஏர் விசுவல் மற்றும் கிரீன்பீஸ் (Air visual and Greenpeace) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, உலகின் மிக மோசமாக காற்று மாசடைந்த முதல் 10 நகரங்களில் 7 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளது. அதில் முதலிடத்தில் அரியானா மாநிலத்தின் முக்கிய நகரமான குர்கிராம் உள்ளது. முந்தைய ஆண்டில் இருந்து அதன் காற்றின் தரம் மேம்படுத்தப்பட்டபோதும், குர்கிராம் முதலிடத்தில் உள்ளது.
மிக மோசமாக காற்று மாசடைந்த பட்டியலில் இடம்பெறுள்ள இந்திய நகரங்கள், குர்கிராம், நொய்டா, காசியாபாத், பரிதாபாத், லக்னோ, பட்னா, பிவாடி ஆகும். அரியானா மாநிலத்தில் மூன்று நகரங்களும், உத்தரபிரதேசத்தில் மூன்று நகரங்களும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக தலைநகரம் டெல்லியை சுற்றியுள்ள அனைத்து புறநகர்(NCR) நகரங்களும் பட்டியலில் உள்ளன.
அதேபோல நமது அண்டை நாடான பாகிஸ்தானின் பைசலாபாத் நகரம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் டாப் 10 பட்டியலில் இந்தியாவின் 7 நகரங்களும், பாகிஸ்தானின் இரண்டு நகரங்களும், சீனாவின் ஒரு நகரமும் இடம் பெற்றுள்ளன.
"இது நமது மகத்தான ஆரோக்கியம் மற்றும் நமது பணப்பரிமாற்றங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று கிரீன்பீஸ் தென்கிழக்கு ஆசியாவின் நிர்வாக இயக்குனர் எப்சோ சாங் கூறுகிறார்.