மூத்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சஞ்சாரம் புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்ட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலக்கியத்திற்கு அளிக்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது தமிழில் மூத்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சஞ்சாரம் புத்தகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 


2014-ஆம் ஆண்டு வெளியான சஞ்சாரம் என்ற புத்தகத்தை எழுதியதற்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 


கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை பேசும் நாவலாக சஞ்சாரம் நாவல் உறுவானது குறிப்பிடத்தக்கது. 


விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்த இவர் 1984-ஆம் ஆண்டிலிருந்து புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார்.


ஆங்கிலம், இடாய்ச்சு, பிரான்சியம், கன்னடம், வங்காளம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இவரது சிறுகதைகள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. "அட்சரம்" என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டுள்ளார்.