புதுடெல்லி: தங்கள் தொலைபேசி பேட்டரி நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. சில்ம சாயங்களில் நீண்ட நேரம் சார்ஜ் செய்ய வேண்டிய நிலையும் உள்ளது. விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களில் பேட்டரி பயன்பாடு மிக அதிகமாக உள்ளது, இதன் காரணமாக பயனர்கள் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே சில மொபைல் நிறுவனங்கள் இந்த பிரச்சனையை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. வேகமான சார்ஜிங் செய்யும் தொழில்நுட்பத்தை ஒரு நிறுவனம் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இப்போது ஸ்மார்ட்போனின் பேட்டரி மிக விரைவாக சார்ஜ் செய்யப்படலாம். சீன நிறுவனமான சியோமி (Xiaomi )  உங்கள் தொலைபேசியை வெறும் 10 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யக்கூடிய ஒரு வழியை கண்டுபிடித்துள்ளது.


வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள சியோமி 


நவீன சகாப்தத்தில், மக்கள் மொபைல்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு விரைவான சார்ஜிங் செய்யும் வசதி இருந்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோன்றவர்களின் பிரச்சினைகளை மனதில் கொண்டு சியோமி ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. சியோமி நிறுவனம் 200W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. சியோமி இந்த தொழில்நுட்பத்தில் வெற்றியை அடைந்தால், அது ஸ்மார்ட்போன்கள் துறையில் ஒரு புரட்சியை கொண்டு வர முடியும்.


வயர்லெஸ் சார்ஜரைக் கொண்டுவர திட்டம்


வயர் உள்ள மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 200W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக நிறுவனம்  Mi10-ல் 120W வயர் சார்ஜிங் வசதியை வழங்கியது. வேகமான சார்ஜிங்கிற்கு கூடுதலாக, சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை கொண்டு வரவும்  திட்டமிட்டுள்ளது.


ALSO READ | Google Fit App: கேமராவின் உதவியுடன் இதயத்துடிப்பு, சுவாசத்தை அளவிடும் அசத்தல் செயலி..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR