ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வரும் யமஹா நிறுவனம். யமஹா மோட்டார் இந்தியா (Yamaha Motor India) நிறுவனம் தனது FZ25 மற்றும் FZS25 மோட்டார்சைக்கிள்கள் விலையை திடீரென குறைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புது விலை குறைப்பை தொடர்ந்து FZ25 மற்றும் FZS25 மோட்டார்சைக்கிள் (Yamaha Motor India) மாடல்கள் விலை முறையே ரூ. 1,34,800 மற்றும் ரூ. 1,53,600 என மாறி இருக்கிறது. இவை முந்தைய விலையை விட ரூ. 18,800 மற்றும் ரூ. 19,300 வரை குறைவு ஆகும். விலை குறைப்பிற்கு முன்னர் FZS25 மாடல் ரூ. 1,53,600 என்ற விலையிலும், FZ25 மாடல் ரூ. 1,58,600 என்ற விலையிலும் விற்கப்பட்டு வந்தன.


ALSO READ | Yamaha தனது சக்திவாய்ந்த பைக் FZ X ஐ அறிமுகப்படுத்தப் போகிறது!


FZ25 சீரிஸ் உற்பத்தி செலவீனங்களை ஓரளவு குறைத்து இருப்பதாக யமஹா வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. செலவீனங்கள் குறைக்கப்பட்டதால், விலை குறைப்பு அறிவிக்கப்படுவதாக யமஹா தெரிவித்துள்ளது. 


யமஹா FZ25 மற்றும் FZS25
யமஹாவின் பிஎஸ்6 பைக்குகள் இரண்டிலும் 249 சிசி ஏர்-கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்-6 விதிகளுக்குட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த எஞ்சின் 20.5 பிஎச்பி பவர் மற்றும் 20.1 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும். இந்த செயல்திறன் இரண்டு பைக்குகளிலும் ஒன்றுபோலவே இருக்கும்.


ஆனால் இந்த பைக்குகளில் பிஎஸ்-4 வெர்ஷனைக் காட்டிலும் பிஎஸ்-6 மாடல்களின் எஞ்சின் செயல்திறன் குறைந்தளவே உள்ளது. இந்த எஞ்சின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் இந்த இரண்டு பைக்குகளும் சஸ்பென்ஷன் அமைப்பு பொதுவாகவே உள்ளது. பைக்குகளின் முன்பக்கத்தில் டெலஸ்கோப்பிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்கத்தில் அட்ஜெஸ்டபிள் மோனோகிராஸ் சஸ்பென்ஷன் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.


யமஹா பிஎஸ் எஃப்.இசட் 25 மாடல் ரேஸிங் ப்ளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் நிறத் தேர்வுகளில் வருகிறது. அதேபோல பிஎஸ்6 எஃப்.இசட்.எஸ் 25 மாடல் பிளாட்டினா க்ரீன், வொயிட்-வெர்மில்லின் மற்றும் டார்க் மேட் ப்ளூ ஆகிய நிறத் தேர்வுகளில் வருகிறது. 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR