வீட்டில் இருந்தபடியே, வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் குறைபாடுகளை ஆன்லைனில் (Online) சரிசெய்யலாம். லாக்டௌன் முடியும் வரை அனைத்து குறைபாடுகளையும் ஆன்லைனிலேயே சரிசெய்ய முடியும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் நேரமும் வீணாகாமல் ஆன்லைனில் எப்படி வாக்காளர் அட்டையில் உள்ள குறைகளை தீர்ப்பது என்று பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் (Voter ID) ஏதேனும் தவறு இருந்தால், அதை ஆன்லைனில் சரிசெய்யலாம். யார் வேண்டுமானாலும் பெயர், முகவரி அல்லது புகைப்படத்தில் ஏற்பட்டுள்ள தவறுகளை வீட்டிலிருந்தே சரி செய்து கொள்ளலாம். வாக்காளர் அடையாள அட்டைகள், வாக்களிப்பதைத் தவிர பல இடங்களில் தேவைப்படுகின்றன. இது உங்கள் அடையாள அட்டையாகவும் செயல்படுகிறது.


ALSO READ: EPF ஓய்வூதியதாரர்களுக்கு இனி ஆயுள் சான்றிதழ் புதுப்பித்தல் இன்னும் எளிது!!


வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள தவறுகளை எவ்வாறு சரி செய்வது?


  • முதலில், தேசிய வாக்காளர் சேவை இணையதளமான www.nvsp.in க்கு செல்லவும்.

  • உங்களுக்கு தேவையான பிரிவில் கிளிக் செய்யவும்.

  • உங்கள் பெயர் அல்லது முகவரியில் உள்ள தவறை சரி செய்ய விரும்பினால், ஆன்லைன் படிவம் 8 ஐ நிரப்ப வேண்டும்.

  • வாக்காளர் அடையாள அட்டை எண்ணை படிவம் 8 இல் நிரப்ப வேண்டும். சரியான பெயர் மற்றும் சரியான முகவரியை உள்ளிடவும்.

  • பின்னர், பெயர் மற்றும் முகவரி மாற்றங்களுக்கு சரியான ஆவணங்கள் பதிவேற்றப்பட வேண்டும்.

  • ஆதார் அட்டை, வங்கி பாஸ் புக், ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை பதிவேற்றலாம்.

  • படிவத்தை சமர்ப்பித்த பிறகு, ஒரு குறிப்பு எண் (Reference Number) உங்களுக்கு அளிக்கப்படும். இதன் மூலம் நீங்கள உங்கள் விண்ணப்பத்தின் நிலையைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.


வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படத்தை மாற்ற என்ன செய்ய வேண்டும்?


  • வாக்காளர் அடையாள அட்டையின் புகைப்படத்தை மாற்ற, மீண்டும் போர்ட்டலில் உள்நுழைக.

  • இங்கே 'Personal Details’ என்ற டேப்பை (Tab) கிளிக் செய்யவும்.

  • புகைப்பட திருத்தத்திற்கான ஆப்ஷனை அங்கு காண்பீர்கள்.

  • இங்கு உங்கள் புதிய புகைப்படத்தை பதிவேற்றலாம்.


சுமார் ஒரு மாதத்தில் புகைப்படம் புதுப்பிக்கப்படும். 


ALSO READ: கஷ்டத்திலும் கூட நல்ல வருமானம் ஈட்ட வேண்டுமா? இந்த திட்டம் ஒரு சிறந்த வழி..