சிறிய முதலீடு .... கை நிறைய லாபம் ! ஏழைகளுக்கான 4 வழிகள்
How to Earn Money: வருமானத்தை அதிகரிக்க பல வழிகள் உள்ளன. குறிப்பாக குறைவான முதலீட்டில் அதிக பணம் சம்பாதிக்கக்கூடிய 5 வழிகளை இங்கே பார்க்கலாம்.
குறைந்தபட்ச முதலீட்டில் அதிக பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. உங்களின் சரியான உத்தி, திறமை, உங்கள் ஆர்வம் ஆகியவை இருந்தால், தொழிலில் வெற்றி பெறலாம். அதற்கு நீங்கள் சரியான தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும். அனுபவம் உள்ள அல்லது குறைவான முதலீடுடன் இருக்கும் தொழில்களை தொடங்கும்போது நீங்கள் வெற்றி அடைய அதிக சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. மிடில் கிளாஸில் இருப்பவர்கள் அதிகமானோர் இத்தகைய வாய்ப்பை அதிகம் தேடுகின்றனர். அவர்களுகாக குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கொடுக்கக்கூடிய 5 வழிகளை இங்கே தெரிந்து கொள்வோம்.
வாடகை மூலம் வருமானம்
உங்களிடம் வீடு இருந்தால், அவற்றிற்கு அதிக வாடகை கிடைக்கும் என்றால் அதனை நீங்கள் முதலீடாக மாற்றலாம். உதாரணமாக நீங்கள் இருக்கும் வீட்டிற்கு அதிக வாடகை கிடைக்கும்பட்சத்தில், குறைவான வாடகை வீட்டில் நீங்கள் இருந்து, அதிக வாடகை மூலம் கிடைக்கும் பணத்தை சிறிய வருவாயாக மாற்றிக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோருக்கு வாடகைக்கு விடுவதன் மூலம் குறைவான காலத்தில் போதுமான வருவாயை எட்ட முடியும்.
மேலும் படிக்க | Money Tips! உங்களை லட்சாதிபதியாக ஆக்கும் அரிய ‘20’ ரூபாய்!
ஈவுத்தொகை செலுத்தும் பங்குகள்
ஈவுத்தொகை செலுத்தும் பங்குகளில் முதலீடு செய்வது பணம் சம்பாதிப்பதற்கான எளிதான வழியாகும். ஈவுத்தொகை பங்குகள் என்பது பங்குதாரர்களுக்கு அவர்களின் லாபத்தில் ஒரு பகுதியை டிவிடெண்ட் வடிவில் கொடுக்கும் பங்குகள் ஆகும். அதிக வருமானத்திற்கு குறைந்த ரிஸ்க் விருப்பத்தைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு இது நல்லது.
பிராண்டுகளுக்கு விளம்பரம்
சமூக ஊடகங்களில் உங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்கள் இருந்தால், நீங்கள் பிராண்டுகளுடன் கூட்டாளராகவும் உங்களைப் பின்தொடர்பவர்களிடையே விளம்பரப்படுத்தவும் முடியும். அதாவது அழகு சாதனப் பொருட்களை விளம்பரப்படுத்துவது போல. இதன் மூலம் நீங்கள் போதுமான வருவாயை ஈட்டலாம்.
மேலும் படிக்க | மயில் உள்ள ‘10’ ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்கா... நீங்களும் அம்பானி ஆகலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ