₹28 செலுத்தினால் போதும்; ₹4,00,000 காப்பீட்டு பலன்களை பெறலாம்..!!!
கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளை வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் வெறும் ரூ.28.5 வைப்பு செய்வதன் மூலம் நீங்கள் முழு ரூ.4 லட்சத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு, மக்களிடையே மருத்துவ காப்பீடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் சென்றடைய மிகக் குறைந்த பணத்திற்கு அரசாங்கம் காப்பீட்டு வசதியையும் வழங்குகிறது. இந்த வரிசையில், அரசுத் திட்டங்கள், பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) மற்றும் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) ஆகியவை உள்ளன. இது உங்களுக்கு ரூ .4 லட்சம் வரை காப்பீட்டை அளிக்கிறது.
ரூ.4 லட்சத்திற்கான காப்பீட்டை பெற, நீங்கள் அரசாங்கத்தின் இரண்டு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகியவற்றில் சிறிது பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அதன் நன்மைகளைப் பெறலாம். இந்த இரண்டு திட்டங்களிலும், ஆண்டுக்கு ரூ.342 மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும்.
பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு; பாகிஸ்தான் பயங்கரவாதியை தில்லி போலீஸ் கைது
பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY)
பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் கீழ், விபத்து காப்பீடு செய்தவர் இறந்தால் அல்லது நிரந்திர ஊனமுற்றால், ரூ .2 லட்சம் இழப்பீடு கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ், காப்பீடு தற்காலிகமாக ஊனமுற்றவராக இருந்தால், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும். இதில், 18 முதல் 70 வயதுக்குட்பட்ட எந்த நபரும் காப்பீடு பெறலாம். இந்த திட்டத்தின் வருடாந்திர பிரீமியமும் ரூ 12 மட்டுமே.
ALSO READ| IRCTC iPay : தற்போது ரயில் டிக்கெட்டை நொடியில் புக் செய்யலாம்..!!
பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY)
பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ், காப்பீடு செய்தவர் இறந்தால், அவரது நாமினிக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 18 முதல் 50 வயது வரை உள்ள எவரும் இந்தத் திட்டத்தின் பயனைப் பெறலாம். இந்த திட்டத்திற்கும் ஆண்டு பிரீமியம் ரூ.330 மட்டுமே செலுத்த வேண்டும். இவை இரண்டும் டெர்ம் இன்ஷ்யூரென்ஸ் பாலிசிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு வருட காலத்திற்கான காப்பீடு ஆகும்.
ஜூன் 1 முதல் மே 31 வரை காப்பீடு
இந்த காப்பீட்டுத் தொகை ஜூன் 1 முதல் மே 31 வரையிலான காலத்திற்கானது. இதில் சேர நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். பிரீமியத்தை வங்கி கணக்கில் இருந்து எடுக்கும் போது, வங்கிக் கணக்கு மூடப்பட்டிருந்தாலோ அல்லது கணக்கில் போதுமான இருப்பு இல்லை என்றலோ காப்பீடு ரத்து செய்யப்படலாம். எனவே, காப்பீடு எடுப்பதற்கு முன், அது தொடர்பான அனைத்து தகவல்களையும் விதிகளையும் அறிந்து கொள்ளுங்கள்.
ALSO READ | உங்களுக்கு LPG மானியம் கிடைக்கவில்லையா; காரணம் ‘இதுவாக’ இருக்கலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR