முகவரி ஆதாரம் இல்லாமலேயே குடும்ப உறுப்பினர்களின் ஆதார் முகவரியை புதுப்பிக்கலாம்!
ஆதார் அட்டைதாரர்கள் அடையாள அட்டையின் விவரங்களை புதுப்பிக்க முற்படும்போது அவர்கள் எந்த பிரச்சனையும் சந்திக்க கூடாது என்ற எண்ணத்துடன், UIDAI பல விதமான சேவைகளையும் வசதிகளையும் வழங்குகிறது.
புதுடெல்லி: ஆதார் வழங்கும் அமைப்பு UIDAI பல விதமான சேவைகளையும் வசதிகளையும் வழங்குகிறது. ஆதார்அட்டைதாரர்கள், அடையாள அட்டையின் விவரங்களை புதுப்பிக்க முற்படும்போது அவர்கள் எந்த பிரச்சனையும் சந்திக்க கூடாது என்ற எண்ணத்துடன் இந்த சேவையை வழங்குகிறது. 12 இலக்க பயோமெட்ரிக் தரவுகளை கொண்ட ஆதார் அட்டை மிகவும் அத்தியாவசியமான அடையாள அட்டை என்பது அனைவரும் அறிந்ததே.
குடும்பத் தலைவரின் ஆவணங்களை கொண்டு குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் ஆதார் முகவரியை ஆன்லைனில் திருத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் தரவுகளை புதுப்பிக்க, உங்களுக்கு அருகிலுள்ள ஆதார் மையங்களுக்குச் சென்று, 'குடும்ப அடிப்படையிலான ஆதார் அப்டேட் ஆப்ஷன்' மூலம், முகவரி ஆவணங்கள் இல்லாவிட்டாலும், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் முகவரியையும் புதுப்பிக்கலாம்.
தனிநபருக்கான ஆவணங்கள் கிடைக்காத குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் முகவரியைப் புதுப்பிக்க, குடும்பத் தலைவர் அடிப்படையிலான ஆதார் புதுப்பிப்பு ஆப்ஷனைப் பயன்படுத்தி முகவரியைப் புதுப்பிக்கலாம். ஆதார் முகவரியை புதுப்பிக்க, குடும்பத் தலைவரின் ஆதார் மட்டுமே உங்களுக்குத் தேவைப்படும். தந்தை, தாய், மகள், மகன், மனைவி போன்ற இருவருக்கும் இடையே உள்ள உறவுகளுடன் விண்ணப்பதாரர் மற்றும் HOF பெயர் குறிப்பிடப்பட்ட உறவு ஆவணத்தின் சான்று இருந்தால் முகவரியை புதுப்பிக்கலாம்.
ஆதார் சேவை மையத்தில் ஆதார் அட்டை முகவரி புதுப்பிப்பை அங்கீகரிக்க குடும்பத் தலைவரின் கைரேகை பயோமெட்ரிக் தேவை.
பின்வரும் செல்லுபடியாகும் ஆவணங்களின் பட்டியலை உறவின் ஆதாரத்தைக் கண்டறியப் பயன்படுத்தலாம்
- பாஸ்போர்ட் என்னும் கடவுச்சீட்டு
- ரேஷன் கார்டு/PDS கார்டு
- ஓய்வூதிய அட்டை
- அரசாங்கத்தால் வழங்கப்பட்ட திருமணச் சான்றிதழ்
- குழந்தை பிறந்ததற்கு அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ் (இது 0-5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது)
மேலே உள்ள ஆவணங்கள் உங்களிடம் இல்லையென்றால், குடும்ப தலைவர் எனப்படும் HOF (Head of the Family) என்பவரின் அதே முகவரியில் வசிக்கும் குடியிருப்பாளருடனான உறவை உறுதிப்படுத்தும் குடும்பத் தலைவரின் சுய அறிவிப்புப் படிவத்தின் பிரிண்ட் அவுட்டையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலிலிருந்து UIDAI இணையதளத்தில் இருந்து இதை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். இருப்பினும், இந்த ஆவணம் மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். தாமதம் அல்லது நிராகரிப்பைத் தவிர்க்க, நீங்கள் பூர்த்தி செய்த படிவத்தின் உள்ளடக்கங்களை கவனமாக ஆராய வேண்டும்.
புதுப்பிப்பதற்கான அப்பாயிண்ட்மெண்ட் பெற ரூ. 50 கட்டணத்தைச் செலுத்தி முகவரியைப் புதுப்பிக்க நீங்கள் முன்பதிவு செய்யலாம். இருப்பினும், HOF எனப்படும் குடும்ப தலைவரின் பயோமெட்ரிக் விபரங்களை கொண்டே புதுப்பிக்க முடியும்.
மேலும் படிக்க | வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி? எந்த ஆவணங்கள் தேவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ