லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள சாம்ராட் காலணியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியுள்ளனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.


இச்சம்பவம் குறித்து கைசாப்பூரா காவல்துறை அதிகாரி தரம் பால் தெரிவிக்கையில்... சாம்ராட் காலணி குடியிறுப்பு பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் 34 பேருக்கும் மேர்பட்டோர் காயமடைந்துள்ளனர். அசோக் குமார்(45) என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.


அசோக் குமாரின் வீட்டில் இருந்த சிலிண்டரே வெடித்து விபத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும், தற்போது அவர் CMCH மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இச்சம்பவத்தில் அசோக் குமாரின் மனைவி சுனிதா(40) மற்றும் அவரது மகன் ராஜ்(13) சம்பவயிடத்திலேயே இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது மகள்கள் காஜல் மற்றும் பூஜா என்னும் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.