சென்னை: காலா படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலா திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜசேகரன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்ததாவது... காலா படத்தின் கதை தன்னுடைய கதை எனவும், இந்த படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.


மேலும் தனது கதையின கரிகாலன் என்று ஏற்கனவே பதிவு செய்து உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தனது கரைப்படியே காலா படம் திரைப்படமாக்கப்பட்டு இருப்பதாவும், மனுவில் குறிப்பிட்டு இருந்தார். 


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், படத்தின் கதை திருடப்பட்டதற்கு எந்த விதமான ஆதாரமும் சமர்பிக்கப்படவில்லை, இதனால் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என தள்ளுபடி செய்துள்ளனர். 


அதேவேலையில் தமிழ் திரையுலகின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவடைந்துள்ள நிலையில் வரும் ஜூன் 15-ஆம் நாள் காலா படம் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முன்னதாக வரும் ஏப்ரல் 27-ஆம் நாள் படம் வெளியாகலாம் என படக்குழுவினர் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது!