கடந்த 2ம் தேதி இரவு 11:30 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த 30-ம் மேற்பட்ட கடைகள் தீயினால் பாதிக்கப்பட்டது. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைந்துள்ள வீரவசந்தராயர் மண்டபம் இடிந்து விழுந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே, மண்டபத்தை சீரமைக்கவும், தீ விபத்து குறித்த காரணத்தை கண்டறியவும் 12 நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தது தமிழக அரசு. பின்னர் சீரமைப்பு பணிகள் நடந்து முடிந்துள்ளது.


இந்நிலையில், தீ விபத்திற்கு பிறகு, மீனாட்சி கோயில் ஆயிரங்கால் மண்டபம் இன்று (21ம் தேதி) திறக்கப்படுகிறது. ஆயிரங்கால் மண்டபத்தை இன்று முதல் சுற்றிப்பார்க்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மீனாட்சி கோயில் சித்திரை திருவிழா ஆலோசனை கூட்டத்துக்குப் பின் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் இதனை தெரிவித்தார். 


மேலும், பொது மக்களின் அவசர உதவிக்காக எண் 12890ல் பக்தர்கள் புகார் தரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.