மகாராஷ்டிர மாநிலம் அகமந்த் நகரில், கணக்கினை சரியாக போடாத மாணவரின் தொண்டையில் மரக்கம்பினை ஆசிரியர் தண்டித்த விஷயம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிராவின் கார்ஜட் பகுதியின் ஜில்லா பரசட் பள்ளியில் 2-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ரோகன் D ஜனிரி. கடந்த செவ்வாய் அன்று பள்ளியில் இவரது ஆசிரியர் சந்தரகாந்த் ஷோபன் ஷின்டே இவரிடன் கணக்கு ஒன்றினை கொடுத்து தீர்வு செய்யுமாறு பணித்துள்ளார்.


அந்த கணக்கினை தீர்க முடியாமல் அந்த மாணவர் தவிக்க, மாணவரை தண்டிக்கும் விதமாக கணக்கு ஆசிரியர் ஷின்டே மரக் கம்பினை எடுத்து அவரது வாயில் தினித்துள்ளார். இதனால் சிறுவனின் தொண்டை சவ்வு கிழிந்து ரத்தம் பீரிட்டு வந்துள்ளது. 


இச்சம்பவத்தால் அச்சத்தில் மூழ்கிய இதர மாணவர்கள் வகுப்பறையினை விட்ட வெளியே ஓடினர். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டார். ஆரம்பக்கட்ட சோதனைக்குப் பின்னர் அவர் புனே மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.


பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்க சம்பந்தப்பட்ட ஆசிரியரின் மீது புகார் பதிவு செய்துள்ளனர். எனினும் இதுவரை குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.