ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட வேண்டும்: வைகோ வழக்கு!
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட உத்தரவிடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட 17 இடங்களில் பொதுமக்கள் நேற்று 71-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக திரண்டு கையில் பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கோஷம் எழுப்பியவாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட உத்தரவிடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.
மத்தி, மாநல அரசிடம் அனுமதி பெறாமல் நடைபெறும் ஸ்டெர்லைட்டின் புதிய தொழிற்சாலை விரிவாக்க பணிக்க தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மனு தொடர்பாக விரைவில் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.