தமிழகம் வரும் பிரதமர் மோடி அவர்களில் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை வேளச்சேரி சாலை, சின்னமலை, வி.எஸ்.டி. மோட்டார் அருகில் மாதிமுக சார்பில் கறுப்புக் கொடி ஆர்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து மாதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது...


"தமிழ்நாட்டுக்கு வாழ்வாதாரமான காவிரிப் பிரச்சினையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத துரோகம், நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் சமூக நீதியை அழித்த துரோகம், நாசகார நியூட்ரினோ திட்டத்தைத் திணிக்க முற்படும் கொடூரம், காவிரி டெல்டா பிரதேசத்தில்  ஹைட்ரோ கார்பன், ஷேல், மீத்தேன் ஆகிய எரிவாயுத் திட்டங்களைச் செயல்படுத்தும் அக்கிரமம், தமிழக மீனவர்களுக்குச் செய்யும் துரோகம், நாட்டின் பன்முகத் தன்மையையும், மதச் சார்பற்ற அடித்தளத்தையும் தகர்க்க முற்படும் இந்துத்துவா சக்திகளின் தீய நோக்கத்தைச் செயல்படுத்த முனையும் அராஜகம், கர்நாடகத்தில் மேகதாட்டு, ராசி மணலில் அணைகள் கட்டுவதற்கு மறைமுக ஏற்பாடு என்ற விதத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் விரோதமாக செயல்பட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகையை எதிர்த்து தமிழக மக்களின் கொந்தளிப்பை உணர்த்தும் வகையில் 2018 ஏப்ரல் 12 ஆம் அன்று காலை 10 மணி அளவில் தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் சென்னை வேளச்சேரி சாலை, சின்னமலை, வி.எஸ்.டி. மோட்டார் அருகில் எனது தலைமையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.