மனிதர்களின் மனநிலை இன்னும் மாறவில்லை - நிர்பயா தாயார்!
கர்நாடக காவல்துறை முன்னாள் டிஜிபி சங்கிலியானா-வின் சர்ச்சைக்குறிய கருத்திற்கு பதில் அளிக்கும் வகையில் நிர்பயா-வின் தாயார் `மனிதர்களின் மனநிலை இன்னும் மாறவில்லை` என தெரிவித்துள்ளார்!
கர்நாடக காவல்துறை முன்னாள் டிஜிபி சங்கிலியானா-வின் சர்ச்சைக்குறிய கருத்திற்கு பதில் அளிக்கும் வகையில் நிர்பயா-வின் தாயார் "மனிதர்களின் மனநிலை இன்னும் மாறவில்லை" என தெரிவித்துள்ளார்!
முன்னதாக கடந்த வியாழன் அன்று பெங்களூருவில், சமுதாயத்தில் சாதனை படைத்த பெண்களை கவுரவிக்கும் விதமாக விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், டெல்லி பேருந்தில் பலவந்தமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயா-வின் தாய் ஆஷா தேவிக்கு விருது வழங்கப்பட்டது. அதேபோல, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரியாக இருந்த ரூபாவிற்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக காவல்துறையின் முன்னாள் டிஜிபி சங்கிலியானா, ஆஷா தேவியின் உடல் அமைப்பே இவ்வளவு கட்டுக்கோப்பாகவும் அழகாக இருக்கிறது என்றால் அவரது மகள் நிர்பயா எப்படி இருந்திருப்பார்? என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அதுமட்டுமல்லாமல், பலம் வாய்ந்த ஆண்கள் பலாத்காரம் செய்கையில், அவர்களிடம் சண்டையிடாமல் பெண்கள் சரணடைந்து விடவேண்டும். அப்படி செய்தோமேயானால் உயிர் பலி ஏற்படுவதை தவிர்க்கலாம். என தன் கருத்தினை பதிவு செய்துள்ளார்.
சங்கிலியானா பேசிய இத்தகு சர்சைக்குறிய கருத்துகள் பெண்களிடையேயும் மாதர் சங்கத்தினரிடையேயும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிருபயாகவின் தாயார் ஆஷா தேவி தெரிவிக்கையில், மனிதர்களின் மனநிலையில இன்னும் மாற்றம் வரவில்லை, கூடிய விரைவில் மாற்றம் வரவேண்டும் என தன் கருத்தினை பதிவு செய்துள்ளார்!