கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்து வெளிவரும் திரைப்படம் "மெர்குரி". சைலன்ட் த்ரில்லராக உருவாயுள்ள இந்த படத்தில், ரம்யா நம்பீசன், ஷனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், அனிஷ் பத்மன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பிரபுதேவா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 30 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் வெளியாகியுள்ள சைலன்ட் மூவி தயாராகியுள்ள திரைப்படம் இது.


 தற்போது தமிழகத்தில் புது திரைப்படங்களை வெளியிடுவதில்லை என திரைத்துரையினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டம் முடியும் வரை ‘மெர்குரி’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பினை வெளியிட போவதில்லை என படத்தின் இயக்குனர் முன்னதாக தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் வரும் ஏப்ரல் 13-ஆம் நாள் இப்படம் வெளியாகும் என குறிப்பிட்டு இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டனர். இதற்கிடையில் ஆரம்ப நிலையில் இருந்த தமிழ் சினிமா ஸ்டிரைக் வலுத்தது வருகிறது. பல பேச்சு வார்த்தைக்கு பிறகும் படத்தை ஸ்டிரைக் முடியாமல் ரிலீஸ் செய்வது ஏற்புடையதாய் இருக்காது எனத் தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டமாக கூறியது. இப்படம் நேற்று தமிழ் நாட்டை தவிர்த்து உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. 


இந்த நிகழ்வை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். 


அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பது....!  


இன்று 'மெர்க்குரி' என் தாயகம்... தமிழகம் அல்லாமல் உலகெங்கும் 1000 திரையரங்குகளில் பெரிய ரிலீஸை சந்தித்திருக்கிறது. எனது படத்திற்கு இவ்வளவு பெரியளவில் ரிலீஸ் செய்து, பலதரப்பட்ட ரசிகர்களைச் சென்றடைந்ததிருக்கிறது. இதுவரை நல்ல வரவேற்பும் பெற்றிருப்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதோ, இந்தப் படத்தை என்னை இந்த அளவு ஆளாக்கிய தமிழ் மக்களுக்குக் காட்ட இயலாத சூழ்நிலையை எண்ணி வருந்துகிறேன்.  ரிலீஸ் தேதியையும் தள்ளி வைத்தால் வர்த்தகம் பாதிக்கும் என்ற சிக்கலிலும் மாட்டிக்கொண்டோம்.


படத்தின் இந்தி வெர்ஷனையும் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்த வேலை நிறுத்தத்தில் தங்கள் வேலையை விடுத்து, அனைத்தும் சீரான நிலைக்குத் திரும்பும் என நம்பிக்கையுடன் முழு மூச்சாகப் பங்கு கொண்டிருக்கும் ஃபெப்ஸி தொழிலாளர்களுக்கு நாங்களும் எங்களது ஆதரவை தெரிவிப்பதால், என் தமிழ் ரசிகர்களுக்கு இந்த 'மெர்குரி' படத்தைக் காண்பிக்க இயலவில்லை. 


மிகுந்த வலியுடனும், வேதனையுடனும் தமிழ் ரசிகர்களுக்கு இப்படத்தைக் காட்ட நானும் எனது படக்குழுவும் காத்துக் கொண்டிருக்கிறோம். தயவு செய்து பைரசிகளை தவிர்க்கும்படியும், படத்தைத் தியேட்டர்களில் பார்க்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்" என அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.