20 வருடங்களுக்கு முன் இதே நாளில் வெளியான 10 திரைப்படங்கள்!
சாதாரண நாட்களை காட்டிலும் பண்டிகை தினங்களிலேயே அதிகமாக படங்கள் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில் (14/11/2021) 20 வருடங்களுக்கு முன்னர் (14/11/2001) தீபாவளி பண்டிகையின் போது 10 தமிழ் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
மனிதனாக பிறந்த அனைவருக்கும் பொழுதுபோக்கு என்பது தேவைப்படக்கூடிய ஒன்று. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிலான பொழுதுபோக்கை விரும்புவார்கள். ஆனால் அனைவருக்கும் பொதுவான பொழுதுபோக்கு ஒன்று உள்ளது, அதுதான் சினிமா. வயது வரம்பு இன்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சினிமா பிடிக்கும்.
சாதாரண நாட்களை காட்டிலும் பண்டிகை தினங்களிலேயே அதிகமாக படங்கள் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில் (14/11/2021) 20 வருடங்களுக்கு முன்னர் (14/11/2001) தீபாவளி பண்டிகையின் போது 10 தமிழ் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது . அந்த படங்களின் பட்டியல் பின்வருமாறு ,
1) ஆளவந்தான் : சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்த படம் தான் "ஆளவந்தான்". இப்படத்தில் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் . மேலும் இது திகில் கலந்த திரைப்படமாகும். இந்த படம் ஹிந்தி மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது .படத்தின் அனிமேஷன் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது.
2) ஷாஜகான் : ஆர்.பி .சௌத்ரி தயாரிப்பில் ,ரவி இயக்கத்தில் , இளைய தளபதி இயக்கத்தில் ஒருதலை காதலை மையமாக வைத்து வெளியான படம் தான் "ஷாஜகான்" . இந்த படத்தில் , ரிச்சா பலோட் (அறிமுகம்), விவேக் ,கோவை சரளா,நிழல்கள் ரவி,உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் பாடல்கள் இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது .
3) நந்தா : பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் "நந்தா". இதில் லைலா, ராஜ்கிரண், கருணாஸ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யாவின் முரட்டுத்தனமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
4) ஆண்டான் அடிமை : மணிவண்ணன் இயக்கத்தி சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த படம் "ஆண்டான் அடிமை". இப்படத்தில் சுவலட்சுமி,திவ்யா உன்னி,ரஞ்சித்,மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் .இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது .
5) லவ் மேரேஜ் : கே.சுபாஷ் இயக்கத்தில் அஜய், ரஞ்சனா, விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியான காதல் திரைப்படம் தான் "லவ் மேரேஜ்". தெலுங்கு படத்தில் நடித்த அஜய் தான் இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தார் . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
6) காசி தமிழ் படம் : வினயன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் , 2001-ம் ஆண்டு வெளிவந்த செண்டிமெண்ட் கலந்த தமிழ்த் திரைப்படம் "காசி".இதில் காவ்யா மாதவன் ,காவேரி ,மணிவண்ணன் ,பார்வதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .இதில் விக்ரம் பார்வையற்றவராக நடித்து நன்கு ஸ்கோர் செய்திருப்பார் .இப்படம் இசையிலும், கதையிலும் வெற்றி பெற்றது.
7) தவசி : கே. ஆர். சங்கர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளிவந்த ஒரு குடும்ப தமிழ்த் திரைப்படம் தான் "தவசி".இதில் சௌந்தர்யா, ஜெயசுதா,நாசர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.இந்த படத்தில் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் .ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது .
8) மனதை திருடிவிட்டாய் : ஆர். டி. நாராயணமூர்த்தி இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் "மனதை திருடிவிட்டாய் ".இதில் கௌசல்யா, காயத்ரி ஜெயராம், விவேக், வடிவேலு, ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படம் பாக்ஸ் ஆபீசில் ஒரு சராசரி வெற்றியை அடைந்து.
9) பொன்னான நேரம் : ரவி ராஜா இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் ,2001-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் "பொன்னான நேரம்".பிரதியுஷா,ஷண்முகசுந்தரம் ,காதல் சுகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரதத்தில் நடித்துள்ளனர் .இப்படத்தில் நடிகர் ராமராஜன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் .
10) பார்த்தாலே பரவசம் : கே. பாலச்சந்தர் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் ,2001-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் "பார்த்தாலே பரவசம்".சிம்ரன்,ஸ்னேகா,விவேக்,மணிவண்ணன்,நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் .ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது .
ALSO READ இது தான் அஜித்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்; வைரல் போஸ்ட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR