இது தான் அஜித்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்; வைரல் போஸ்ட்

அஜித்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டசை, அஜித்தின் அனுமதியுடன் ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 14, 2021, 11:02 AM IST
இது தான் அஜித்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்; வைரல் போஸ்ட்

H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி அஜித் (Ajith) ரசிகர்களை மட்டுமல்லாது, மற்ற ரசிகர்களையும் அதிகபட்ச எதிர்பார்ப்பில் ஆழ்த்திய தமிழ் படம் தான் 'வலிமை'. இந்த படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து பலரும் படக்குழுவினரை வசைபாடி வந்தனர். அதனையடுத்து படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் ஆதங்கத்தை சற்று அமைதிப்படுத்தியது. 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கும் வலிமை, 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹுமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா (Karthikeyan) உள்ளிட்டோர் நடித்தள்ளனர். யுவன்சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையமைத்துள்ளார். மேலும் இந்த படமானது த்ரில்லர் ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் தென்னிந்திய போலீஸ் ஒருவருக்கும் பைகர்ஸ் கிளப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாகக் கொண்டதாகும்.

ALSO READ | டைடில் மட்டும் 'வலிமை' அல்ல! அஜித் சாரும் தான் - புகழாரம் சூட்டும் கார்த்திகேயன்!

இந்நிலையில் தற்போது வலிமை படத்தில் அஜித்தின் குடும்ப உறுப்பினராக நடித்திருப்பவர் ராஜ் ஐயப்பா. இவர் தற்போது அஜித்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் ஒன்றை அஜித்தின் அனுமதியுடன் ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார். இந்த ஸ்டேட்டஸ் அனைவரையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

அதன்படி ராஜ் ஐயப்பா வெளியிட்டுள்ள ஸ்டேட்டஸில் நடிகர் அஜித், ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரர் என்பதெல்லாம் குறிப்பது அவர்களின் பொருளாதார நிலையை குறிப்பது தான். கேரக்டரை குறிப்பது அல்ல. நல்லவர்கள் - கெட்டவர்கள் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் இருக்கிறார்கள். அதனால் பொருளாதார அடிப்படையில் ஒவ்வொரு மனிதனின் கேரக்டரை முடிவு செய்வதை நிறுத்த வேண்டும். வேக் அப் எவ்ரிபடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

மேலும் அஜித் சாரின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் இடம்பெற்றுள்ள இந்த மெசேஜ் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அவரின் அனுமதியுடன் இதை பகிர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த போஸ்ட் அஜித் ரசிகர்களால் செம வைரலாக்கப்பட்டு வருகிறது.

ALSO READ விக்ரமில் கமலின் மகனாக நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News