வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் ’தடை’: உருவ கேலி செய்த கிறிஸ் ராக்குக்கு ’நன்றி’யா? கொதிக்கும் ரசிகர்கள்
வில் ஸ்மித் செயல் தவறு என்றாலும், கிறிஸ் ராக் ஆஸ்கர் மேடையில் சக நடிகரின் மனைவியை உருவ கேலி செய்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என பெண்கள் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த முறை ஆஸ்கர் நிகழ்ச்சியை ஹாலிவுட்டின் பிரபல காமெடி நடிகர் கிறிக் ராக் தொகுத்து வழங்கினார். முதல்முறையாக நடிகர் வில் ஸ்மித், ’கிங் ரிச்சர்ட்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார். விருது வழங்கும் விழாவில் கிறிஸ் ராக் பேசிக்கொண்டிருக்கும் போது வில் ஸ்மித் மனைவி ஜடா பிங்கெட்டின் குறித்து கேலியாக பேசினார்.
தலையில் முடியில்லாமல் அவர் இருப்பதை ஒரு படத்தோடு ஒப்பிட்டு அவர் பேச, உடனே இருக்கையில் இருந்து எழுந்து மேடைக்கு சென்ற வில் ஸ்மித் அவரை பளார் என கன்னத்தில் அரைந்தார். அதோடு அவரை கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார். ஆனாலும் கிறிஸ் ராக் அமைதி காத்தார். அதன்பிறகு ஆஸ்கர் மேடையில் பேசிய வில் ஸ்மித் உடைந்து அழுதார். தனது மனைவிக்கு உடல்நலக்குறைவு இருப்பதாகவும், அதன்காரணமாகவே அவருக்கு முடி கொட்டிவிட்டதாகவும் தெரிவித்தார். அதோடு அவரது செயலுக்கும் வருத்தம் தெரிவித்தார்.
மேலும் படிக்க | KGF: Chapter 2: வெறும் 12 மணி நேரத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட் விற்பனை!
அதன்பிறகு வில் ஸ்மித்துக்கு ஆதரவாக உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ஆதரவு தெரிவித்தனர். அதேநேரம் அவரது செயலுக்கு எதிர்ப்பும் கிளம்பியது. அவர் மீது வழக்கு தொடர கிறிஸ் ராக் மறுத்து தெரிவித்த நிலையில், ஆஸ்கர் குழுவின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித். அதோடு அவர் நடிப்பில் உருவாகி ஓடிடி ரிலீசுக்கு காத்திருக்கும் படங்களை வாங்கிய நிறுவனங்கள் அவரது படங்களை வெளியிட மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்ச்சிகளில் வில் ஸ்மித் கலந்துகொள்ள 10 ஆண்டுகள் தடை விதித்து அகாடமி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க | விஜய் குறித்து 2018-ல் ராஷ்மிகா போட்ட ட்வீட்! அப்பவே இப்படியா?
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “ஆஸ்கர் விழாவில் வில் ஸ்மித் செய்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதற்காக வருந்துகிறோம். விழா மேடையில் அமைதி காத்த கிறிஸ் ராக்கிற்கு நன்றி. வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 10 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை கலைஞர்கள் மற்றும் விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதி படுத்தவே வழங்கப்பட்டுள்ளது. அதோடு ஆஸ்கர் அகாடமியின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் நோக்கத்தோடு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த தடையை அடுத்து வில் ஸ்மித் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். உருவ கேலி செய்த கிறிஸ் ராக் மீது நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு நன்றி சொல்வது ஏன் என அகாடமி அமைப்புக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர். வில் ஸ்மித் செயல் தவறு என்றாலும், கிறிஸ் ராக் ஆஸ்கர் மேடையில் சக நடிகரின் மனைவியை உருவ கேலி செய்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என பெண்கள் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வில் ஸ்மித் மீது எடுத்த நடவடிக்கை போல கிறிஸ் ராக் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரலும் எழுந்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR