விஜய் குறித்து 2018-ல் ராஷ்மிகா போட்ட ட்வீட்! அப்பவே இப்படியா?

ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் தளபதி 65-ல் ஜோடி சேருவார் என்று பேசப்பட்ட நிலையில், அந்த படத்தில் பூஜா ஹெக்டே நடித்தார். தற்போது விஜய் 66 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Apr 8, 2022, 04:05 PM IST
  • விஜய் குறித்து ராஷ்மிகா போட்ட ட்வீட்
  • தளபதி 66 படத்தில் நடிக்கும் ராஷ்மிகா
  • இணையத்தில் வைரலாகும் பழைய பதிவு
விஜய் குறித்து 2018-ல் ராஷ்மிகா போட்ட ட்வீட்! அப்பவே இப்படியா? title=

தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதற்கான படப்பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அப்போது ராஷ்மிகா விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில் ராஷ்மிகா விஜய் குறித்து 2018-ம் ஆண்டு வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Rashmika Mandhana Twitter

மேலும் படிக்க | பிரபாஸின் அமெரிக்க பயணம் - ஹாலிவுட் படத்திற்கா இல்லை அறுவை சிகிச்சைக்கா?

கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. அந்த படத்தில் ரக்‌ஷித் ஷெட்டி நாயகனாக நடிக்க ராஷ்மிகா நாயகியாக நடித்தார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த அவர், தெலுங்கில் சாலோ படம் மூலம் அறிமுகமானார். அடுத்ததாக ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் படம் தெலுங்கு ரசிகர்களை தாண்டி தென்னிந்தியா முழுவதும் கவனம் பெற்றது. 

Rashmika Mandhana Twitter

சுல்தான் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகம் ஆனார். தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.  தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகாவை இன்ஸ்டாவில் 29.9 மில்லியன் பேர் பாலோ செய்கிறார்கள். இவர் விஜய்யுடன் தளபதி 65-ல் ஜோடி சேருவார் என்று பேசப்பட்ட நிலையில், அந்த படத்தில் பூஜா ஹெக்டே நடித்தார். தற்போது விஜய் 66 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா படத்தின் பூஜையில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் படிக்க | ரூ.1000 கோடி வசூலைக் குவித்த RRR..! கடுப்பில் ஆலியா பட்! என்ன காரணம்?

இந்நிலையில் அவர் 2018-ம் ஆண்டு ட்விட்டரில் பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில், “விஜய் சார் மற்றும் அட்லீ சாரின் அடுத்த படத்தில் நான் நடிக்கிறேனா என என்னை பலரும் கேட்கிறீர்கள், ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் விரைவில் நான் அவருடன் நடிப்பேன் என்று நம்புகிறேன். உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக நான் விஜய்யுடன் இணைந்து நடிப்பேன். உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். நான் மீண்டும் சொல்ல விரும்புவது உங்கள் அன்பிற்கு நன்றி.” என்று எழுதியுள்ளார். இந்த பதிவை தற்போது விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News