சென்னை: 14-வது சென்னை சர்வேதேச திரைப்பட விழா இன்று தொடங்கியுள்ளது. 8 நாட்கள் சென்னையில் இந்த திரைப்பட விழா நடைபெற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் இந்திய பனோரமா, சிறப்பு திரையீடு என பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் இடம்பெறுகின்றன. விழாவில் 50 நாடுகளை சேர்ந்த 180-க்கு மேற்பட்ட திரைப்படங்கள் பங்கேற்கின்றன. சென்னையில் உள்ள 5 திரையரங்குகளில் விழா நடைபெறுகிறது. 


தமிழ் திரைப்படங்கள் பிரிவில் 24, அம்மா கணக்கு, தேவி, தர்மதுரை, இறைவி, ஜோக்கர், கர்மா, நானும் ரவுடிதான், பசங்க-2, ருபாய், சில சமயங்களில், உரியடி என 12 படங்கள் போட்டியிடுகின்றன. 


விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரைத்துறை பயணத்தை கவுரவிக்கும் வகையில் ஆயிரத்தில் ஒருவன், சூரியகாந்தி திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. 


இதனிடையே விழாவின் முதல் நாளான இன்று ஈரான், சீனா, ஜெர்மானிய மொழி படங்கள் திரையிடப்படவுள்ளன.  
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக அரசு சார்பில் இந்த திரைப்பட விழாவுக்காக 50 லட்ச ரூபாயை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.