ரஜினி-கமல் படங்களில் பணிபுரிந்த திரைப்பிரபலம் உயிரிழப்பு..!
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ராஜ்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழ்ந்துள்ளார். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் தற்போது முத்திரை பதித்து வரும் பல பிரபலமான நடிகர்களையும் இயக்குநர்களையும் அறிமுகப்படுத்தியவர், ராஜ்கண்ணு. இவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளார்.
எஸ்.ஏ ராஜ்கண்ணு:
சினிமா ரசிகர்கள் மத்தியில் இன்றுவரை பெரிய பொக்கிஷமாக கருதப்படும் படம், 16 வயதினிலே. 1977ஆம் ஆண்டு வெளியாகியிருந்த இந்த படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். அவருக்கு முதல் படமே இதுதான். இந்த படத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி என பலர் நடித்திருந்தனர். 16 வயதினிலே படத்தினை எஸ்.ஏ ராஜ்கண்ணு தயாரித்திருந்தார். இவருக்கும் பாரதிராஜாவை சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்ற பெயரும் உண்டு.
மேலும் படிக்க | விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் பிரபல இயக்குநர் யார் தெரியுமா..?
காலமானார்:
பல படங்களை தயாரித்துள்ள ராஜ்கண்ணு, சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இவருக்கு 77 வயது ஆகின்றது. இந்நிலையில், இவர் சென்னையில் நேற்று காலமாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரபலங்கள் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவை சில ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்து வந்தவர்களை அறிமுகப்படுத்திய இவரது மறைவு செய்தி, பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
பிரபலங்கள் இரங்கல்:
ராஜ்கண்ணுவின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலர், ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 16 வயதினிலே பட நடிகர்களும் கிழக்கே போகும் ரயில் படத்தில் நடித்த ராதிகாவும் உணர்ச்சிகரமான பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
பாரதிராஜா ட்வீட்:
பாரதிராஜா வெளியிட்டுள்ள ட்வீட்டில், 16 வயதினிலே படம் மூலம் தன்னை இயக்குநராக அறிமுகம் செய்து, தன் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச்சென்ற என் முதலாளில் S.A ராஜ்கண்ணு அவர்களின் மறைவு தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பேரிழப்பு என குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராதிகாவின் பதிவு:
பிரபல நடிகை ராதிகாவும் எஸ்.ஏ ராஜ்கண்ணுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், தான் அறிமுகமான கிழக்கே போகும் ரயில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ ராஜ்கண்ணு தன் திரையுலக பயணத்தில் பெரும் பங்கு வகித்தவர் என குறிப்பிட்டுள்ளார். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் அவருடன் அற்புதமான நினைவுகளை கொண்டுள்ளதாகவும் ராதிகா குறிப்பிட்டுள்ளார். அவரது ஆத்மா சாந்தியடைய தான் பிரார்த்திப்பதாகவும் அவர் அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
கமல் உருக்கம்:
பிரபல நடிகர் கமல்ஹாசனும் ராஜ்கண்ணுவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்: “ரசிகர்களின் மனதை விட்டு அகலாத பல மகத்தான திரைப்படங்களைத் தமிழுக்குத் தந்த கலையார்வம் மிக்க தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைந்துவிட்டார். என் திரைவாழ்வின் முக்கியமான திரைப்படங்களான 16 வயதினிலே, மகாநதி ஆகிய படங்கள் அவரது தயாரிப்பில் உருவானவை. அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்”
ராஜ்கண்ணு தயாரித்த படங்கள்:
மறைந்த தயாரிப்பாளர் ராஜ்கண்ணு, 70-80களில் மிகப்பெரிய தயாரிப்பாள்ராக விளங்கினார். இவர், தயாரித்த முதல் படம், 16 வயதினிலே. இந்த பாட்திற்கு பிறகு, ராதிகா சரத்குமார் முதன் முதலாக நாயகியாக அறிமுகமான கிழக்கே போகும் ரயில் படத்தை தயரித்திருந்தார். அதன் பிறகு, பாக்கியராஜ் நடிப்பில் வெளியான எங்க சின்ன ராசா மற்றும் கன்னி பருவத்திலே ஆகிய படங்களை இயக்கியிருந்தார். கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற மகாநதி படத்தையும் இவரே தயாரித்திருந்தார்.
மேலும் படிக்க | ‘போர் தொழில்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளி வைப்பு..! காரணம் இதுதான்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ