‘போர் தொழில்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளி வைப்பு..! காரணம் இதுதான்..!

Por Thozhil OTT Release date: நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள போர் தொழில் படம் ஓடிடியில் இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jul 12, 2023, 04:02 PM IST
  • போர் தொழில் ஒரு தொடர் கொலையின் மர்ம முடிச்சை அவிழ்க்கும் திரைப்படம் ஆகும்.
  • இந்த படம் ஓடிடி தளத்தில் இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
  • ஆனால் படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. காரணம் என்ன?
‘போர் தொழில்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளி வைப்பு..! காரணம் இதுதான்..! title=

சரத்குமார், அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் போர் தொழில். இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். திரையரங்குகளில் வெற்றிகமாக ஓடி வரும் போர் தொழில் திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

போர் தொழில் திரைப்படம்..

தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான திருச்சியில், 20-30 வயதில் உள்ள இளம் பெண்கள் வரிசையாக கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றனர். இந்த வழக்கை விசாரணை செய்யும் 2 போலீஸ் அதிகாரிகள் வழக்கில் உள்ள மர்மங்களை கண்டுபிடிக்கின்றனர். அவர்கள் இந்த வழக்கை தீரத்து வைத்தார்களா? கொலை காரன் பிடிப்பட்டானா? என்பதே ‘போர் தொழில்’ படத்தின் கதை. நல்ல சைக்கோ த்ரில்லர் கதைகளுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியல் கிடைக்கும் அங்கீகாரம் இந்த படத்திற்கும் கிடைத்துள்ளது. 

மேலும் படிக்க | அஜீத்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு இந்த தேதியில் இருந்து தொடக்கம்!

ரசிகர்களின் வரவேற்ப்பு..

போர் தொழில் படத்திற்கு கோலிவுட் ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பினை அளித்துள்ளனர். முரடனான போலீஸ் அதிகாரியாக நடித்த சரத் குமாருக்கும், பயந்த காவல் அதிகாரியாக நடித்த அசோக் செல்வனுக்கும் பாராட்டு குவிந்து வருகிறது. தமிழில் வெளியான சைக்கோ த்ரில்லர் படங்களில் ‘ராட்சசன்’ படத்திற்கு தனி இடம் உள்ளது. அந்த படத்தை பார்த்த அனுபவத்தை போர் தொழில் படம் கொடுத்ததாக படம் பார்த்த பலர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, இந்த படத்தை இயக்கிய புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜாவிற்கும் பாராட்டு குவிந்து வருகிறது. 

பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன்..

போர் தொழில் படம், திரையரங்குகளில் கடந்த மாதம் 9ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டில் வெளிவந்த மிக சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என மக்களால் புகழப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்த பின்பும் இப்படம் வசூலிலும் மக்களின் வரவேற்பிலும் சக்கை போடு போட்டு வருகிறது. முதல் நாளில் சுமார் 85 லட்சம் வரை வசூல் செய்த இந்த திரைப்படம் தற்போது கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. இப்படம், சுமார் 6 காேடி செலவிலேயே தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஓடிடியில் வெளியாவதாக அறிவிப்பு..!

தற்போது வரை ரசிகர்களின் கூட்டத்தில் நிரம்பியிருக்கும் போர் தொழில் திரைப்படம், ஓடிடியில் இந்த மாதம் 7ஆம் தேதி அல்லது 10ஆத் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்ததது. இதனை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், தெரிவித்திருந்த தேதி கடந்த 2 நாட்கள் ஆன பின்பும் எந்த ஓடிடி தளத்திலும் படம் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாந்து போயினர். 

வெளியிடாதது ஏன்..? 

போர் தொழில் திரைப்படத்தை பலர் இன்னமும் திரையரங்கில் வந்து பார்த்து கொண்டிருக்கின்றனர். படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனும் ஏறிக்கொண்டிருக்கிறது. இதை பாதிக்க விடாமல் பார்த்து கொள்வதற்காக படக்குழு ஓடிடி ரிலீஸை தள்ளிப்போட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

எப்போது வெளியாகும்..? எப்படி பார்க்கலாம்..? 

போர் தொழில் திரைப்படம், அநேகமாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) ஆரம்பத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் நிலை தொடர்ந்தால் மீண்டும் போர் தொழில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது. இந்த படம், பிரபல ஓடிடி தளமான சோனி லிவ்-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

போர் தொழில் படத்தின் இன்ஸ்பிரேஷன்..

போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா, இந்த படத்தின் கதை எதைப்பார்த்து தனக்கு தோன்றியதென ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். கமல் நடிப்பில் 17 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகியிருந்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தை பார்த்தில் இருந்து தனக்கும் சைக்கோ கில்லர் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை தோன்றியதாக தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் பிரபல இயக்குநர் யார் தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News