2.0: 100-வது நாள் படப்பிடிப்பு 50% முடிந்தது இயக்குநர் ஷங்கர் டுவீட்
ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் இயக்குநர் ஷங்கர் அவர்கள் தனது டுவீட்டர் பக்கத்தில் 2.0 படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பு நிறைவு செய்கிறோம். ரஜினியும் அக்ஷய் குமாரும் நடித்த கிளைமாக்ஸ் உள்ளிட்ட முக்கியமான இரு பெரிய சண்டைக்காட்சிகளை எடுத்துமுடித்துவிட்டோம். 50% படப்பிடிப்பு முடிந்தது என்று அவர் டுவீட் செய்துள்ளார்.
இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரூ 350 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாரிக்கபடுகிறது.