லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27-ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் அக்டோபர் 26-ம் தேதி மாலை 2.0 படக்குழுவினர் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிக்காப்டர் மூலமாக உலகின் ஒரே ஒரு 7 நட்சத்திர ஹோட்டலான "Burj- Al - Arab" செல்கின்றனர். அங்கு உலகளாவிய 2.0 படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. 


இந்நிகழ்வைத் தொடர்ந்து அக்டோபர் 27 அன்று 2.0 படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடைபெறுகிறது


இசை வெளியீடு நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:-


* 2.0 படத்தின் இசை வெளியீடு burj park என்ற இடத்தில் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட நிகழ்வு நடத்த துபாய் அரசாங்கம் முதன் முறையாக உத்தரவு வழங்கியுள்ளது.


* இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் 125 சிம்போனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். மேலும் 2.0 படத்திலிருந்து ஒரு பாடலை இந்நிகழ்ச்சியில் நேரலையாக இசையமைக்கவுள்ளார்.


* பாஸ்கோ நடனக்குழு சூப்பர்ஸ்டார் ரஜினி - இயக்குனர் ஷங்கர் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் கூட்டணியில் உருவான பாடல்களுக்கு சிறப்பு நடனவிருந்து அளிக்கவுள்ளனர்.


* இந்நிகழ்ச்சியைப் காண 12000 பேர் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


* துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரம்மாண்ட LED போடப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 


* துபாய் அரசர் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகமே எதிர்நோக்கும் இந்நிகழ்வைப் பார்க்க பல பிரபலங்கள் துபாய் விரைந்த வண்ணமுள்ளனர்.