நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பு மட்டுமல்லாது பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்குகிறார்.  இவரின் படங்கள் பெரும்பாலும் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் நகைச்சுவையாக அமைந்துள்ளது.  இவரது திரை வாழ்க்கையில் சிறந்த திருப்புமுனையாக அமைந்தது டாக்டர் படம், இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் இவரின் அடுத்தடுத்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.  தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகி எட்டுத்திக்கும் சிவகார்த்திகேயனின் முகம் தான் தெரிய போகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | கேஜிஎப் படத்தின் இசையமைப்பாளர் ஒரு இரும்பு தொழிலாளியா?


சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டான்'.  காமெடி மற்றும் ஆக்ஷன் நிறைந்துள்ள இந்த படத்தில் ப்ரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஷிவாங்கி, ஆர்ஜே விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த படம் ஏற்கனவே மார்ச்-25ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், இப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போனது.  இப்படத்திலிருந்து  வெளியான போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  தற்போது இந்த படம் கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாடும் வகையில் மே மாதம் 13ம் தேதி வெளியாகவுள்ளது.  இப்படத்தில் சேட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சியும், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்ப்ளிக்ஸ் தளமும் வாங்கியிருப்பதாக முன்னரே தகவல்கள் வெளியானது.  



அதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் 'எஸ்கே20' படம் வெளியாகவுள்ளது.  அனுதீப்.கே.வி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.  தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகப்போகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷப்கா நடிக்க, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் மற்றும் நவீன் பாலிஷெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இந்த படத்தை ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.



அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'அயலான்'.  ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில்  உருவாகியுள்ள இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் மற்றும் கேஜெஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.  அறிவியல் தொழில்நுட்பம் நிறைந்த கதையம்சம் கொண்ட இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் போன்ற பலர் நடித்துள்ளனர்.  ஹாலிவுட் படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படும் இந்த படத்தைய் டிசம்பர் மாதம் 23ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



மேலும் படிக்க | OTTயில் விஜய்யின் ‘பீஸ்ட்’- லாபமா, நஷ்டமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR