ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படங்களில் ஒன்று கமல்ஹாசனின் விக்ரம். மாஸ்டர் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெயியாக போகும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் ஆகியுள்ளது. இந்த படம் நடிகர் கமலின் (Kamal Haasan) 232 வது படம் ஆகும். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லோகேஷ் கனகராஜ் (Lokesh kanagaraj) இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கமல் ஹாசன் (Kamal Haasan) ஹீரோவாக நடிக்கிறார். விஜய் சேதுபதி (Vijay Sethupathi), பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் விக்ரம் படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாசையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.  அதே நேரத்தில் படத்தில் கதாநாயகி யார் என்பதை அறிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளனர். 


ALSO READ | 'ஆரம்பிக்கலாங்களா?’ என ட்வீட் போட்டு, கமலின் விகரம் பற்றிய அதிரடி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்


இந்நிலையில் கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 62 ஆண்டுகள் நிறைவேறிய உள்ளது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், நடன இயக்குநர், பாடலாசிரியர், அரசியல்வாதி என பன்முகங்களை வெளிப்படுத்தும் நடிகர் கமல்ஹாசன். 


இவர் கடந்த 1960 ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில்தான் அறிமுகமானார். தற்போது கமல் ஹாசன் நடிக்க வந்து 62 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, விக்ரம் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ‘ஒன்ஸ் எ லயன், ஆல்வேஸ் எ லயன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


 



 


மேலும் கமல் ரசிகர்கள், சிறப்பிக்கும் விதமாக #62YearsOfKamalism என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | கமலில் "விக்ரம்" படத்தில் இருந்து நடிகர் ராகவா லாரன்ஸ் விலகல்? எனத் தகவல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR