'ஆரம்பிக்கலாங்களா?’ என ட்வீட் போட்டு, கமலின் விகரம் பற்றிய அதிரடி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

ரசிகர்களை எதிர்பார்ப்பின் விளிம்பில் வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்திற்குப் பிறகு தனது அடுத்த படத்தைப் பற்றிய சமீபத்திய அப்டேட் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 7, 2021, 07:09 PM IST
  • விரைவில் தொடங்கவுள்ளது விக்ரம் பட ஷோட்டிங்-லோகேஷ் கனகராஜ்.
  • 'விக்ரம்' படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
  • அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
'ஆரம்பிக்கலாங்களா?’ என ட்வீட் போட்டு, கமலின் விகரம் பற்றிய அதிரடி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் title=

சமீப காலங்களில் அதிகமாக டிரெண்டிங்கில் இருக்கும் இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவராவார். குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்து அசால்டாக அசுர வெற்றிகளை கொடுத்து விட்டார் லோகேஷ் கனகராஜ். 

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சமீபத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த 'மாஸ்டர்' படம் ரசிகர்களுக்கு இடையில் அபார வரவேற்பைப் பெற்றது. லோகேஷ் கனகராஜின் இயக்கம் இதில் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. மாஸ்டர் படத்தை அடுத்து, உலக நாயகன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்திற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

ரசிகர்களிடையே அதிக அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள விக்ரம் படத்தின் கதை, திரைக்கதையின் இறுதிகட்ட வேலைகளில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) மும்முரமாக உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ALSO READ: சென்னையை விட்டு கிளம்பிய விஜய், மீண்டும் ரசிகர்களுக்கு தரிசனம்: வைரல் புகைப்படம்

சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட விக்ரம் படத்தின் டைடில் டீசர் மிகவும் வித்தியாசமாகவும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருந்தது. இந்த டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. 

விக்ரம் (Vikram)  படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க மலையாள நடிகர் ஃபஹத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சில நாட்களுக்கு முன்னர் செய்தி வந்தது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதற்கிடையில், முன்னர் நினைத்திருந்ததை விட விக்ரம் பட படப்பிடிப்பு இன்னும் வேகமாக துவங்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். கமல்ஹாசனுடன் ஒரு தனி விமானத்தில் இருப்பது போன்ற ஒரு படத்தைப் பகிர்ந்த லோகேஷ், இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர்  ‘ஆரம்பிக்கலாங்களா #Vikram’ என்றும் குறிப்பிட்டு ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளார். விக்ரம் பட படப்பிடிப்பு துவங்கப்போகிறது என்ற செய்தி கண்டிப்பாக கமல் (Kamal Haasan) மற்றும் லோகேஷ் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். 

'விக்ரம்' படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கமல் மற்றும் ஃபஹாத் தவிர இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் பற்றிய விவரத்தை படக்குழு விரைவில் அறிவிக்கும் என கூறப்பட்டுள்ளது.

ALSO READ: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரபல இயக்குனருக்கு அலர்ஜி!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News