செவன் வொண்டர் ஸ்டார் 2023: வானவில் வண்ணங்களில் உடையணிந்து விருதுகளை பெற்ற நடிகைகள்!
செவன் வொண்டர் ஸ்டார் வுமன் 2023 விருது நிகழ்ச்சி சமீபத்தில் கோவாவில் நடைப்பெற்றது.
செவன் வொண்டர் ஸ்டார் வுமன் 2023 விருது நிகழ்ச்சி சமீபத்தில் நடைப்பெற்றது. இதில், தமிழ் திரையுலக நடிகைகள் கலந்து கொண்டு விருது பெற்றனர். கௌரவமிக்க, வண்ணமயமான இந்த நிகழ்ச்சி ஜான் அமலன் எண்ணத்தில் உருவாக, இந்தியன் மீடியா ஒர்க்ஸ் மற்றும் இந்திய மகளிர் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் சமூக சேவை, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் மேம்பாடு உள்ளிட்டவற்றில் பங்களிப்பு செய்துவரும் நபர்களை அங்கீகரித்து கௌரவிக்கிறது.
செவன் வொண்டர் ஸ்டார் வுமன் சவுத் இந்தியா 2023 என்பது தென்னிந்தியாவின் பல்வேறு பின்னணியில் உள்ள பெண்கள் மற்றும் பிரபலங்களை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டது. இதில் ஏழு தகுதிவாய்ந்த பெண்கள் வானவில்லின் ஏழு வண்ணங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து அந்நிறத்தில் உடைகளை அணிய வேண்டும்.
அதன்படி, சிவப்பு நிறத்தில் நடிகை சஞ்சிதா ஷெட்டி, ஆரஞ்சு நிறத்தில் நடிகை ஆஷ்னா ஜவேரி, மஞ்சள் நிறத்தில் நடிகை ஜனனி, பச்சை நிறத்தில் மெஜந்தா குழும நிறுவனங்களின் மேலாண் இயக்குநர் ராக்கி ஷா, நீல நிறத்தில் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர். அல்மோஸ் சஜ்ஜத், இண்டிகோ நிறத்தில் நடிகை ரம்யா சுப்ரமணியன், வோய்லட் நிறத்தில் ஸ்டாண்டர்ட் காட்டன் இண்டஸ்ட்ரீஸ் மேலாண் இயக்குநர் அபர்ணா சுங்கு ஆகியோர் உடையணிந்து மேடையேறி விருதுகள் பெற்றனர். மேலும் அணிவகுப்பு மூலம் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | 23 வயதில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கும் பிரபல நடிகை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ