இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துவரும் படம் திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், ராஷி கன்னா, ப்ரியா பவானி ஷங்கர், பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதி ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்ணன் திரைப்படத்துக்குப் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம் மற்றும் மாறன் ஆகிய படங்கள் ஓடிடியில்தான் ரிலீஸ் ஆகின. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


தனுஷ் படங்களைப் பொறுத்தவரை அவரது படத்துக்கு அனிருத் இசையமைத்து சுமார் 7 வருடங்கள் ஆகின்றன. தனுஷ் நடித்த தங்க மகன் படத்துக்குப் பின்னர் இவர்களது காம்போவில் எந்தப் படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் இப்படத்தில் இந்த காம்போ மீண்டும் இணைந்துள்ளது.


 



மேலும் படிக்க | களத்தில் அத்துமீறிய ரசிகர்கள்- விராட் கோலி கொந்தளித்த வீடியோ வைரல்!


அந்த வகையில், இப்படத்தின் முதல் பாடலாக ‘தாய்க் கிழவி’ எனும் பாடல் சில தினங்களுக்கு வெளியானது. தனுஷ் இப்பாடலை எழுதியுள்ளதுடன் அவரே பாடியும் உள்ளார். சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் இடம்பெற்ற பாப்புலர் வசனமான ‘தாய்க்கிழவி’யை மையமாக வைத்து இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் இப்பாடல் சர்ச்சையைச் சந்தித்துள்ளது. பாடல் வரிகள் முதியோர்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாக சமூக நல ஆர்வலர் வழக்குத் தொடர்ந்துள்ளார். குறிப்பிட்ட வரிகளை நீக்கவேண்டும் எனவும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளாராம். பாடல் வரிகள் நீக்கப்படுமா அல்லது படக்குழு தரப்பிலிருந்து இதற்கான விளக்கம் அளிக்கப்படுமா எனும் விபரம் இனிமேல்தான் தெரியவரும்.


மேலும் படிக்க | 25 years of 'பாயசம் சாப்பிடுங்க ஃபிரண்ட்'! வைரலாகும் சூர்ய வம்சம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR